செய்தி: முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா! 9 பேர் ‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’ பட்டமும், 28 பேர் ‘ஆலிமா முஅஸ்கரிய்யா’ பட்டமும் பெற்றனர்!! ஹாஃபிழாக்களுக்கு சிங்கை கா.ந.மன்றம் பணப்பரிசு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வாழ்த்துக்கள் ... posted bymackie noohuthambi (chennai)[19 September 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37353
சிறப்பு மிக்க பட்டமளிப்பு விழா. பட்டம் பெறும் ஹாபிலாக்கள் ஆலிமாக்கள் வாழ்விலும் ஒரே ஒரு முறைதான் வந்து செல்லும் ஒரு வசந்த விழா..
நிகழ்ச்சியை நெறிப்படுத்தியவர்கள். நிகழ்ச்சியில் முன்னிலை வகித்த ஆலிம் பெருமக்கள் சிலரது மக்களின் பட்டம் பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெகு தூரத்திலிருந்து வந்து கலந்து கொண்டார்கள். இலங்கை திரு நாட்டிலிருந்தும் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தார்கள். திருமறை செல்வி - ஹாபிலா பட்டம் பெற்றவர்கள் மொத்தம் 9 பேர்கள். நவ ரத்தினங்கள்.
பட்டங்களை வழங்கி கௌரவித்த ஆலிம் பெருந்தகை அவர்கள் நிகழ்ச்சி அழைப்பிதழில் 7 வதாக பெயர் குறிப்பிடப் பட்டிருந்த மக்கி ஆலிம் அவர்களின் பேத்தி - சிறுபள்ளி இமாம் மக்கி ஹாமிது லெப்பை ஆலிம் அவர்கள் மகள் திருமறை செல்வி - ஆலிமா முஅஸ்கரிய்யா B .Sc அவர்கள் பெயரை சொல்லாமலே 8வது நபரின் பெயரின் பெயரை அறிவித்தார்கள். கூட்டத்தில் இருந்த என் போன்றவர்கள் மனதிலும் பெற்றோர்கள் உறவினர்கள் மனங்களிலும் ஒரு பதட்டம் - சலனம். தவறுதலாக அந்த மாணவியின் பெயர் அச்சடிக்கப்பட்டிருந்ததா அல்லது ஆலிம் அவர்கள் அங்கிருந்த பரபரப்பான சூழலில்தான் அந்த பெயரை விட்டுவிட்டார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டது. நிகழ்ச்சியின் முடிவு து ஆ ஓதி முடிக்கும் வரை அந்த சந்தேகம் நிவர்த்தி செய்யப் படவில்லை.
கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புகழ்பாடும் "யா நபி ஸலாம் அலைக்கும்" என்ற இறுதி நிகழ்ச்சிக்குமுன் அந்த சந்தேகம் சரி செய்யப்பட்டு அந்த ஹாபிலாவின் பெயரும் அங்கே பதிவு செய்யப்பட்டது. அந்த மாணவியின் பெற்றோர்கள் உறவினர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அல்ஹம்து லில்லாஹ்.
இந்த மாதிரி நிகழ்சிகளில் ஆலிமாக்கள் ஹாபிலாக்கள் தந்தைமார்களையும் மேடையில் ஏற்றி பொன்னாடை போர்த்தி கௌரவித்தால் நிகழ்ச்சி இன்னும் சிறப்பாக அமையும் என்பது அடியேனின் தாழ்மையான வேண்டுகோள். அல்லாஹ்வே ஹாபிலாக்களின் பெற்றோர்களுக்கு கிரீடம் அணிவித்து கௌரவிக்கிறான் என்று நபிகள் நாயகம் சொல்லியிருப்பதாக உலமாக்கள் சொல்கிறார்கள்.
மாஷா அல்லாஹ். வீட்டுக்கு ஒரு ஹாபில் என்ற எங்கள் தந்தை மக்கி ஆலிம் அவர்களின் கனவு நனவாகிறது. நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை நெறிகளை எடுத்துக் கூறும் "இவ்வளவு அழகிய முன்மாதிரியா? என்ற நூல் மக்கி ஆலிம் நினைவு பரிசாக ஹபிலாக்களுக்கு வழங்கி கௌரவிக்கப் பட்டது.
இலங்கை திருநாட்டில் பல இடங்களிலும் தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலும் இப்படி பெண்கள் அரபிக் கல்லூரிகள் நிறுவப்படுவதும் அதற்கு மரியாதைக்குரிய அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம் அவர்கள் பெரு முயற்சிகள் மேற்கொண்டு வருவதும் பாராட்டுக்கு உரியது.
ஆலிம் அவர்கள் உரையின் ஆரம்பத்தில் சொன்னபடி, அல்லாஹ்வும் அவனது ரசூலும் எவைகளை எடுத்து நடக்கும்படி நமக்கு கட்டளை இட்டுள்ளார்களோ அவற்றை எடுத்து நடக்கவும் எவற்றையெல்லாம் தடுத்து விலக்கி உள்ளார்களோ அவற்றை முற்றிலுமாக தவிர்ந்து நடக்கவும் நம் எல்லோருக்கும் அல்லாஹ் தவ்பீக் செய்வானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross