Re:...காலாவதியான கடிதங்கள் posted bymackie noohuthambi (Chennai)[22 September 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37389
EXPIRY DATE முடிந்த மாத்திரைகள் போல் கோமான் ஜமாஅத் 2 வது கடிதமும் KEPA வின் பதிலும் அமைந்துள்ளது.செத்த பொண்ணுக்கு ஜாதகம் பார்க்கிறார்கள். இன்னும் சில மணி நேரங்களில் 1வது வார்டு உறுப்பினராக யார் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்ற தகவல் தெரிந்து விடும்.
16ம் திகதி KEPA வின் பதில் கடிதம் கிடைத்தது என்று கூறும் கோமான் ஜமாஅத் கடிதம் 15.9.14 என்று திகதி இடப்பட்டுள்ளது. அவசரத்திலும் பரபரப்பிலும் படபடப்பிலும் கோமான் ஜமாஅத் KEPA வுக்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிகிறது. KEPA வின் நிலைப்பாடும் சரியாக விளங்க வில்லை. கழுவுற நீரில் நழுவுற மீன் என்பார்களே அதே போல் தான் உள்ளது கேள்வியும் பதிலும். பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு என்ன விலை என்று சொல்வது போல் இருக்கிறது.
அல்லாஹ் சொல்கிறான். YA AYYUHALLATHEENA AAMANOO QOOLOO QAWLAN SADHEEDHA...ஈமான் கொண்டவர்களே, நீங்கள் சொல்வதை தெளிவாக சொல்லுங்கள், புரியும்படி சொல்லுங்கள் என்று இதற்கு அர்த்தம் என்று உலமாக்கள் சொல்கிறார்கள். மூடி மறைக்க வேண்டிய அவசியங்கள் இங்கு இருக்க தேவை இல்லை. KEPA வுக்கு ஊர் மக்கள் ஒட்டு மொத்த ஆதரவு தேவை, அது அருணாசலபுரம் வாக்காளரையும் உள்ளடக்கும். அமலக் கனி DCW ஆதரவாளர் என்ற செய்தி முன் கூட்டியே கோமான் ஜமாஅத் நிரூபித்து இருக்க வேண்டும். வேறு இணையதளங்களின் மூலம் கிடைத்த TAPPING செய்திகளை ஆதாரமாக எடுக்க முடியாதுதான்.
இப்போது, எல்லாம் முடிந்து விட்டது. வெற்றி பெறுபவர்கள் நகர் மன்றத்தில் பொறுப்பாக இருந்து ஊர் நன்மைக்காக பாடுபட்டால் அதுவே போதும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross