Re:...வெற்றி posted byNIZAR (kayalpatnam)[23 September 2014] IP: 61.*.*.* India | Comment Reference Number: 37444
அல்ஹம்துலில்லாஹ்,அஸ்ரபு அவர்களின் இந்த வெற்றி எல்லாநேரமும் ஒரு நிலைப்பாடு இருக்காது என்பதை பறைசாற்றி உள்ளது.இது சாதாரன ஒரு வார்டுக்கு நடக்கிற தேர்தல் என்றாலும் நம்ம ஊரு இணையதளங்கள் இங்கயே பற்றயை போட்டு செய்திகள் சேகரித்து சுடச்சுட செய்திகள் வெளியிட்டன.இந்த ரிசல்ட் என்னவாகும் பழைய மாதிரி மவுன புரட்சியா?என்ற திகில் ஒரு பக்கம் இல்லாமல் இல்லை.ஆனால் இதன் முடிவு அருகில் இருக்கும் அன்பு சகோதரர்களின் கைகளில் இருந்தது.தேர்தலுக்காக இல்லாமல் பொதுவாக அஸ்ரபு அவர்கள் மதங்களை கடந்து,ஒரு குடும்ப நண்பராக அந்த பகுதியில் பழகியது நம்பிக்கையை வரவழைத்தது.
இருந்தாலும் கட்சி,கடைசி நேர கவனிப்பு இதில் மூழ்கிவிடுமோ என்ற பயமும் தொட்டு சென்றது.ஆனால் அத்தனையும் கடந்து அஸ்ரபின் மதநல்லிணக்கம் அவருக்கு இந்த வெற்றியை கொடுத்து உள்ளது என்றால் அது மிகையில்லை எனலாம்.அதைப்போல அச்சுபிசகாத கோமான் ஜமாத்தின் உறுதியும் உயிர் கொடுத்துள்ளது எனலாம்.எப்பொழுதுமே ஒரு ஜமாஅத்,ஊரின் பொது அமைப்புகள் என்பது நமது கண்ணியம்,நமது பலம்,
நமது கவ்ரவம்,நமது மரியாதையை,என்பதை உணரவேண்டும்.தேர்தல் வந்துவிட்டால் மோதல்கள் வருவது இயல்பானது.குறை இல்லாத ஜமாத்தும்,அமைப்புகளும் இருக்க முடியாது.அதற்காக கோஷ்டியாக பிரிந்து அனைத்தையும் பலவீனமாக்குவது வேதனையான செயலாகும்.அரசு வட்டாரங்கள் ஜமாஅத் மற்றும் ஊரின் பொதுஅமைப்புகள் சக்தி இல்லாவிட்டாலும் சக்தி இருப்பதாக நம்புவது இயல்பான ஒன்றாகும்.அதை நாமே உறுதிபடுத்துவது எத்தனை ஆபத்தானது.எனவே இனிவரும் காலங்களில் மனமாச்சரியங்களை கடந்து ஒருமித்த ஒரு வேட்பாளரை ஜமாஅத் நிறுத்தினால் அதற்கு கோமான் ஜமாஅத் போல முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.அஸ்ரபு அவர்கள் தங்கள் வார்டுக்கு தன்னிகரற்ற சேவை ஆற்றிட வாழ்த்துகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross