Re:...விளம்பர வெளிச்சத்துக்கு வராத நிறுவனம் posted bymackie noohuthambi (chennai)[23 September 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37469
சகோதரர் மஹ்மூத் அவர்களை என் மகன்தான் முதலில் சந்தித்து அவர் கடை வைத்திருப்பதையும் சொன்னான்.
என்னப்பா அரிசி கிலோ 75 ரூபாய, சீனி கிலோ 85 ரூபாயா என்ன சொல்றா..யார் வாங்குவா என்று மலைப்பாக கேட்டேன். போய்ப்பாருங்கள் என்றான்.
தந்தைக்கு மகன் புத்தி சொல்வதா என்று சிலர் கேட்பார்கள். நமது ஊரில் அப்படி பலர் இருந்திருக்கிறார்கள். எனக்கு என்னவோ பெரிய வயதாகி விட்டது போலவும் சிலர் கேட்பார்கள். இந்த கணினியில் உட்கார்ந்து இந்த வயதிலும் எப்படி கமெண்ட்ஸ் அடிக்கிறாய் என்று கேட்பார்கள். இதை எனக்கு பழகி தந்தவரும் எனது இன்னொரு மகன்தான். நான் முதலில் தமிழில் இந்த கணினியில் கடிதம் எழுத கற்று தந்தவரும் எனது மச்சான் அவர்கள் மகன் வயதில் மிகவும் இளையவர் ஒருவர்தான். அந்த முதல் கடிதமும் நான் கலைஞர் கருணாநிதிக்குதான் எழுதினேன் .தலைப்பு
"பவள விழா நாயகனே, நீ நீடூழி வாழியவே!".
எனவே வயது ஒரு பொருட்டல்ல. மஹ்மூது மாமா அவர்கள் கடைக்கு சென்றேன். விளக்கங்கள் கேட்டேன், சொன்னார்கள். விளம்பரம் ஒன்றும் வரவில்லையே , தொலைக் காட்சியிலும் ஸ்லைட் ஓடவில்லையே என்றேன். ஒரு சாதாரண நோட்டீஸ் சை காட்டினார்கள் .
மருமகன் சாலிஹ் உடைய கட்டுரை மாமாவை உலகறிய செய்ததா அல்லது நம்மாழ்வார் திட்டம் மாமா மூலம் நம் மக்கள் வாழும் இடமெல்லாம் சென்றடைந்ததா - இந்த கட்டுரை மூலம் வேறு விளம்பரங்கள் தேவை இல்லை என்ற நிலையை மாமா அவர்கள் நிறுவனம் நல்ல பெயரை பெற்று விட்டது.
"நாங்க உஜாலாவுக்கு மாறி விட்டோம் , அப்போ நீங்க?"...
என்று ஒரு விளம்பரம் கேட்டிருக்கிறீர்களா...அதேபோல் எல்லோரும் கேட்கும் காலம் விரைவில் வரும் .
நோய் இல்லாமல் இருப்பது மட்டும் ஆரோக்கியம் அல்ல..எனக்கு நோய் இல்லை என்று மனத்தால் நினைப்பதும் அப்படி நினைக்கத்தூண்டும் எல்லாமே ஆரோக்கியம்தான்.அரசு விற்கும் "ஆவின்" பாலிலேயே தண்ணீர் கலந்து கோடி கோடியாக சம்பாதிக்கும் கொடியவர்கள் வாழும் தமிழகத்தில் இப்படி ஒரு எண்ணம் உதித்ததே ஆச்சரியம்தான்.
மாமாவின் முயற்சிகள் வெற்றி பெறவும், மக்கள் நோயில்லா வாழ்வு வாழ ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிலகம் - மாமா அவர்கள் பொதுநலம் கருதி ஆரம்பித்த இந்த இயற்கை மருந்தகம் - சிறப்பாக இயங்கவும் அதைக் கொண்டு மக்கள் பயன்பெறவும் அல்லாஹ் அருள் புரிவானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross