புதிய உறுப்பினராக பதிவியேற்ற சகோதரர் அஷ்ரஃப் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்…! மக்கள் பணி செய்ய மக்களால் கிடைக்கப்பெற்ற அரசு எந்திரத்தின் ஆரம்ப படித்தரம் இது!
அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன்கோல் அன்ன செம்மைத்து ஆகிச்
சிறந்த கொள்கை அறங்கூறு அவையம்
பொருள்: (சங்க காலத்தில்) ஆட்சி, அதிகாரம், பொறுப்பில் உள்ளவர்கள் அச்சமில்லாதவர்களாகவும், மற்றவர்களுக்கு அச்சத்தைத் தராதவர்களாகவும் இருந்துள்ளனர். மேலும் அவலம் மற்றவர்க்கு ஏற்பட்டிருப்பின் அதனை அவலத்துடன் நோக்காது சம நிலையில் நோக்கும் குணம் அவர்களிடத்தில் இருந்துள்ளது. சினம், உவகை காட்டாது அவர்கள் நீதி வழங்கினர். குறிப்பாக அவர்கள் பற்றுள்ளம் இன்றி இருந்துள்ளனர். தனக்கு நீதி சொல்வதால் ஏதேனும் வருமானம் வருமா என்று எதிர்பார்க்காது அவர்கள் அறம் காட்டியுள்ளனர். துலாக்கோல் போல் அவர்கள் அறத்தை நிலை நிறுத்தியுள்ளனர். – இது சங்ககால இலக்கியமான பத்துப்பாட்டினுள் ஒன்றான மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சி.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
இது, பொய்யாமொழிப்புலவன் வள்ளுவனின் கூற்று. பொருள்:
அறம் என்பது செயலா, சொல்லா, எண்ணமா எனப் பார்த்தால். செயலுக்கு அடிப்படையாக இருப்பது எண்ணம். எண்ணம் தூய்மையாக இருந்தால் சொல்லும் செயலும் தூய்மையாக அமையும். எண்ணம் எழுவதற்கு இருப்பிடமாக உள்ள மனம் மாசு இல்லாததாக இருத்தல் வேண்டும். மனத்தின் மாசினைப் போக்குவதற்கு முயலுவதே அறமாகும். மன மாசு என்பது பொறாமை, பேராசை, வெகுளி, கடுஞ்சொல் ஆகியவைகளாகும். அவை இல்லாமல் இருப்பதே அறம் என வள்ளுவன் வாய் மொழிந்துள்ளான்.
ஆக, மக்கள் மனமுவந்து அளித்த பொறுப்பினை காய்த்தல் உவத்தல் இன்றி சீர்தூக்கிப் பார்த்து நன்மை தீமைகளை ஆராய்ந்து பணியாற்ற வேண்டும். நெறி வழுவா நீதியின்பால் நிலைத்திருப்பின் நிலைத்திருப்போம் நெடுங்காலம் மக்கள் மனதில்…!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross