காயல்பட்டினம் நகராட்சியின் 01ஆவது வார்டு இடைத்தேர்தலில், கோமான் ஜமாஅத் சார்பில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் எஸ்.ஐ.அஷ்ரஃப் வெற்றிபெற்றார்.
இன்று காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் நகராட்சியில் பதவியேற்பு விழா நடைபெற்றது. நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் வரவேற்றுப் பேசினார்.
புதிய உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எஸ்.ஐ.அஷ்ரஃபுக்கு, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், பதவியேற்பு உறுதிமொழியின் கீழ் புதிய உறுப்பினர் கைச்சான்றிட்டதோடு, நகராட்சி ஆணையருக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
இவ்விழாவில், நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், நகர்மன்ற உறுப்பினர்களான வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, பி.எம்.எஸ்.சாரா உம்மாள், ஏ.டீ.முத்து ஹாஜரா, எம்.ஜஹாங்கீர், எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், ரங்கநாதன் என்ற சுகு, ஏ.பாக்கியஷீலா, கே.ஜமால், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி,
கோமான் ஜமாஅத் தலைவர் ஜரூக் மற்றும் அதன் நிர்வாகிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், நகர நிர்வாகிகளான பெத்தப்பா சுல்தான், எம்.இசட்.சித்தீக்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் முஹ்ஸின் ‘முர்ஷித்’, காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் ஐதுரூஸ் மற்றும்
01ஆவது வார்டுக்குட்பட்ட கோமான் தெருக்கள், அருணாச்சலபுரம், கடையக்குடி (கொம்புத்துறை) பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிறைவில், நகர்மன்ற உறுப்பினர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கோமான் ஜமாஅத், 01ஆவது வாடுக்குட்பட்ட பகுதிகளின் சார்பில், புதிய உறுப்பினருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன், அவருடன் இணைந்து அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
கள உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |