காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலை, தனது விதிமீறலைத் தொடர்ந்தால், இப்பிரச்சினையை தேசிய அளவிலான விழிப்புணர்வுப் பரப்புரையாகக் கொண்டு செல்லப்படும் என, இம்மாதம் 23ஆம் நாளன்று (நேற்று) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது - சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா - SDPI அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் தெரிவித்திருந்தார்.
அதில் தெரிவிக்கப்பட்ட படி, அவர் தலைமையிலான அக்கட்சியின் நிர்வாகிகள் நேற்று மாலையில் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை பொதுச் செயலாளர் பிரபு சுல்தான், அதன் ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி உள்ளிட்ட நிர்வாகிகள், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, கடையக்குடி (கொம்புத்துறை) தேவாலயத்தின் பங்குத்தந்தை விக்டர் ஆகியோரைச் சந்தித்து, DCW ஆலையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுகள் குறித்து கேட்டறிந்ததோடு, அது தொடர்பான தம் கட்சியின் நிலைபாட்டையும் தெரிவித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஐ.உஸ்மான் கான், தூத்துக்குடி மாவட்ட தலைவர் காதர் முகைதீன், ‘விடியல் வெள்ளி’ இதழின் துணை ஆசிரியர் எம்.எஸ்.அப்துல் ஹமீத், நகர தலைவர் ஷேக் அப்துல் காதிர், செயலாளர் அப்துல் ரஹ்மான், மருத்துவர் அணி தலைவர் எஸ்.எம்.முகைதீன், பாப்புலர் ஃப்ரண்ட் அஷ்ரஃப் உள்ளிட்டோர் இதன்போது உடனிருந்தனர்.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
SDPI தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஐக்கியப் பேரவை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
KEPA தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |