காயல்பட்டினம் நகராட்சியின் 01ஆவது வார்டு இடைத்தேர்தலில், கோமான் ஜமாஅத் சார்பில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் எஸ்.ஐ.அஷ்ரஃப் வெற்றிபெற்றார்.
இதனை முன்னிட்டு, தேர்தல் முடிவு வெளியான - இம்மாதம் 22ஆம் நாளன்று, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில், அதன் நிர்வாகிகளான பிரபு சுல்தான், சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ, எம்.ஏ.எஸ்.ஜரூக், ஐக்கியப் பேரவை அலுவலகப் பொறுப்பாளர் எம்.ஏ.சி.மரைக்கார் உள்ளிட்டோரடங்கிய குழுவினர், வெற்றிபெற்ற எஸ்.ஐ.அஷ்ரஃபை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று, சால்வை அணிவித்துப் பாராட்டினர்.
தகவல்:
சொளுக்கு S.S.M.முஹம்மத் இஸ்மாஈல் (முத்து ஹாஜி)
ஒருங்கிணைப்பாளர், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை.
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
கோமான் ஜமாஅத் சார்பில் இத்தேர்தலில் போட்டியிட்ட எஸ்.ஐ.அஷ்ரஃபுக்கு ஐக்கியப் பேரவை சார்பில் ஆதரவுக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கியப் பேரவை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |