துல்கஃதா (1435) மாத அமாவாசை ஆகஸ்ட் 25 திங்கட்கிழமை அன்று - இங்கிலாந்து நேரப்படி மதியம் 2:12 மணி அளவில் ஏற்படுகிறது. அப்போது
இந்திய நேரம் ஆகஸ்ட் 25 திங்கட்கிழமை மாலை 7:42.
ஆகஸ்ட் 25 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:30 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:15. சூரியன் மறையும்போது
அமாவாசை நிகழ இன்னும் 1.5 மணி நேரம் இருக்கும். ஆகஸ்ட் 25 அன்று தென் பசிபிக் கடலின் தென் மேற்கு கோடியில், தொலைநோக்கிகள்
உதவிக்கொண்டு மட்டும் பார்க்க இயலும். உலகின் வேறெந்த பகுதியிலும் பிறையை காண இயலாது.
ஆகஸ்ட் 26 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:29 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:56. சூரியன் மறையும்போது
சந்திரனின் வயது 23 மணி நேரம். சூரியன் மறைந்து வானில் 24 நிமிடம் வரை பிறை இருக்கும். இருப்பினும் சூரியனுக்கு மிகவும் அருகாமையில்
இருக்கும் காரணத்தால் வெறுங்கண்கள் கொண்டு காயல்பட்டினத்தில் அன்று பிறையை காண இயலாது.
தென் அமெரிக்க கண்டத்தில் எளிதாகவும், மத்திய அமெரிக்க கண்டத்திலும், ஆப்ரிக்கா கண்டத்தின் மத்திய மற்றும் தென் பகுதிகளில் வானிலை
சூழல் தெளிவாக இருந்தாலும் - ஆகஸ்ட் 26 அன்று, வெறுங்கண்கள் கொண்டு, பிறையை காணலாம்.
அமெரிக்காவின் தென் பகுதியிலும், ஆப்ரிக்கா கண்டத்தின் மத்திய பகுதியிலும், ஆஸ்திரேலியா கண்டத்தின் மேற்கு பகுதியிலும், தொலைநோக்கிகள்
உதவிக்கொண்டு பிறையை காணலாம். அமெரிக்காவின் வடபகுதியிலும், ஆப்ரிக்கா கண்டத்தின் வட பகுதியிலும், அரேபியா தீபகற்பத்திலும், தென்
இந்தியாவிலும், இலங்கை, தென் கிழக்கு ஆசியா நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா / நியூசிலாந்து நாடுகளின் இதர பகுதிகளிலும் - பிறையை காண
தொலைநோக்கிகள் அவசியம் தேவைப்படலாம்.
ஆகஸ்ட் 27 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:29 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 7:36. சூரியன் மறையும்போது
சந்திரனின் வயது 47 மணி நேரம். காயல்பட்டினத்தில் எளிதாக வெறுங்கண்கள் கொண்டு, பிறையை காணலாம்.
ஆகஸ்ட் 27 அன்று உலகின் இதர பகுதிகளில் எளிதாக - வெறுங்கண்கள் கொண்டு - பிறையை காணலாம்.
பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ளவர்களில் - கேரளாவை தலைமையகமாக கொண்டு செயல்புரியும் ஹிஜ்ரி குழுவினை
பின்பற்றுவோருக்கு ஆகஸ்ட் 26 - துல்கஃதா 1 ஆகும்.
மாதப்பிறப்பினை கணக்கிட வேறு வழி முறைகளை பயன்படுத்தும் Fiqh Council of North America/Islamic Society of North America
அமைப்புக்கு ஆகஸ்ட் 27 - துல்கஃதா 1 ஆகும்.
உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு ஆகஸ்ட் 25 (அமாவாசை) அன்று ஷவ்வால்
29 பூர்த்தி ஆகிறது. ஆகஸ்ட் 25 அன்று தென் பசிபிக் கடலின் தென் மேற்கு கோடியில், தொலைநோக்கிகள் உதவிக்கொண்டு மட்டும் பார்க்க
இயலும். உலகின் வேறெந்த பகுதியிலும் பிறையை காண இயலாது. தென் அமெரிக்க கண்டத்தில் எளிதாகவும், மத்திய அமெரிக்க கண்டத்திலும்,
ஆப்ரிக்கா கண்டத்தின் மத்திய மற்றும் தென் பகுதிகளில் வானிலை சூழல் தெளிவாக இருந்தாலும் - ஆகஸ்ட் 26 அன்று, வெறுங்கண்கள்
கொண்டு, பிறையை காணலாம்.
எனவே - அவர்கள், ஆகஸ்ட் 26 அன்று, ஷவ்வால் 30 பூர்த்தி செய்து, ஆகஸ்ட் 27 அன்று துல்கஃதா மாதம் துவக்குவர்.
அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு ஆகஸ்ட் 25 (அமாவாசை) அன்று ஷவ்வால் 28 பூர்த்தி
ஆகிறது. எனவே அவர்கள் ஆகஸ்ட் 26 அன்று ஷவ்வால் 29 பூர்த்தி செய்வர். ஆகஸ்ட் 26 அன்று சூரியனுக்கு மிகவும் அருகாமையில்
இருக்கும் காரணத்தால் வெறுங்கண்கள் கொண்டு காயல்பட்டினத்தில் அன்று பிறையை காண இயலாது. எனவே - அவர்கள், ஆகஸ்ட் 27 அன்று,
ஷவ்வால் 30 பூர்த்தி செய்து, ஆகஸ்ட் 28 அன்று துல்கஃதா மாதம் துவக்குவர். |