ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, வரும் அக்டோபர் 11 அன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுத்து, அம்மன்றத்தின் சார்பில் அதன் செயற்குழு உறுப்பினரும், செய்தி தொடர்பாளருமான ஷாஹுல் ஜிஃப்ரீ கரீம் வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை:-
ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் பத்தாவது பொதுக்குழு கூட்டம் மற்றும் ஹஜ்ஜுப்பெருநாள் ஒன்று கூடல் நிகழ்ச்சி , இன்ஷா அல்லாஹ் வருகின்ற அக்டோபர் மாதம் 11ஆம் தேதி, வோகிங் மாநகரில் அமைந்துள்ள மேபோர்ட் கிராம கூடத்தில் (Mayford Village Hall), காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்..
இடம்:
Mayford Village Hall
Saunders Lane
Mayford
Woking
GU22 0NN
இன்ஷாஅல்லாஹ் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தை மேலும் மெருகூட்டும் வகையில் நமது மன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் பல்வேறு அணிகளுக்கான வினாடி-வினா போட்டி, நம் தாயகமாம் காயல்பட்டினம் நகரின் மரபுச் சொல் போட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், ஆண்கள் -பெண்களுக்கான ‘120 வினாடி தொடர் பேச்சுப்போட்டி', பிங்கோ விளையாட்டு, மருத்துவர்களின் கேள்வி - பதில் நிகழ்ச்சி மற்றும் வெளிப்புற விளையாட்டுப் போட்டிகளுக்கும் (outdoor games) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மன்றம் துவக்கபட்டது முதல் இன்று வரையுள்ள மன்ற செயல்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விளக்கப்படவுள்ளது.
இயந்திரத்தனமான நகர வாழ்க்கையின் பரபரப்பை மறந்து மகிழ்வுற்றிருப்பதற்காக, இந்த அரிய வாய்ப்பை மன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு அத்தேதியில் உங்களின் அனைத்து சொந்த வேலைகளுக்கும் மாற்று ஏற்பாடுகள் செய்துவிட்டு, கூட்டத்தில் முழுமையாகக் கலந்து மகிழவும், மகிழ்விக்கவும் அன்புடன்அழைக்கின்றோம்.
இப்பொதுக்குழுவின் உள்ளூர் பிரதிநிதியாக மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் செய்து மரைக்கார் அவர்கள் செயல்படுவார்கள் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கின்றோம்.
உங்கள் யாவருக்கும் கருணையுள்ள அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன்....
மேலதிக தகவல் அறிய WWW.KAYALPATNAM.ORG.UK என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றத்தின் முந்தைய பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |