தூத்துக்குடி மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு தனித்தனியே நடத்தப்படும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கல்லூரிகளில் பயிலும் மாணவர், மாணவிகளுக்கு தமிழில் நடத்தப்படும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் அக்.1 ஆம் தேதி காலை 9 மணியளவில் தூத்துக்குடி வஉசி கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற உள்ளன.
இப்போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர், மாணவிகளுக்குத் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் அக்டோபர் 9 ஆம் தேதி காலை 9 மணியளவில் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்றார் அவர்.
தகவல்:
தினமணி
|