பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று (செப்டம்பர் 27) தீர்ப்பு வழங்கப்பட்டது.
பகல் 2.25 மணியளவில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பை வழங்கினார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக நீதிமன்றம் அறிவிப்பு.
முதல்வர் பதவியை இழந்தார் ஜெ:
பெங்களூர் சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் பவானி சிங் 'தி இந்து'விடன் கூறியதாவது: "சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன.மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஜெயலலிதா எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்.
அவரது முதல்வர் பதவியையும் இழக்கிறார். தீர்ப்பை அடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் காரில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. தண்டனை விபரம் மீதான விவாதம் 3 மணிக்கு தொடங்குகிறது. எதிர்தரப்பு சார்பில், ஜெயலலிதாவுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிடும்" என்றார்.
2. ஊடகங்களின் மவுனம், இந்த ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[27 September 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37510
உப்பு திண்டவர் தண்ணி குடிக்கத்தான் வேண்டும்..!
மத்தியானத்துக்கு பிந்தைய இந்நாள் / முன்னால் முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ஜெயலலிதாவின் வழக்கு குறித்து எழுதாவிட்டால் ஜெயலலிதா காப்பாற்றப்படுவார் என்பது போன்ற பொய்யான நம்பிக்கையின் அடிப்படையில் பல ஊடகங்கள் காக்கின்றன...! மவுனம் காத்தன..! ஜெயலலிதாவின் 91 ஆட்சியிலும் சரி..! 2001 ஆட்சியிலும் சரி..! பல்வேறு ஊழல்கள் வெளி வருவதற்க்கான / வந்ததற்கான ஒரே காரணம் ஊடகங்களின் அற்புதமான பணிதான்...! ஆனால் 2011ஆட்சியில் ஊடகங்கள் மிக மிக மோசமான துரோகத்தை தமிழகத்துக்கு செய்து கொண்டிருக்கின்றன.
"ஊடகங்களின் மவுனம், இந்த ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து"
3. Re:...மகேசன் தீர்ப்பு! posted byomer anas (DOHA QATAR.)[27 September 2014] IP: 37.*.*.* | Comment Reference Number: 37513
வல்லோன் மகேனின் தீர்ப்பு இப்பத்தான் ஒவ்வொரு இடமாக இறங்க ஆரம்பித்து உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!!! இதுபோல்பல தீர்ப்புகள் நாளையே வேறு ஒரு கட்சி கொள்ளை கூட்டத்திற்கும் வரும்.வரணும்,,,ஆகவே, ஆணவம் கொண்ட மானிடரே இனியாவது,அரசன் அன்று கொல்வான்,இறைவன் நின்று கொல்வான்.என்பதை எல்லோரும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். துஆ சலாம்!
4. Re:...முதல்வர் இல்லாத தமிழகம் posted bymackie noohuthambi (chennai)[27 September 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37517
1952 முதல் 2014 வரை தமிழகம் எத்தனையோ முதல்வர்களை கண்டிருக்கிறது. ஆட்சி மாற்றங்கள் எத்தனை ஏற்பட்டபோதும் ஒரு முதல்வர் இல்லாத தமிழகமாக இன்று இரவு அது துயில் கொள்ளப் போகிறது. அந்த ஒரு அசாதாரண நிலை இங்கு. பிரதமர் இல்லாத இரவு அங்கே. வரலாற்றில் ஒரு முக்கியமான இரவு இது 27.9.2014. பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவனா - முதல்வர் இல்லாத மாநிலமா - ஆம்
அங்கே மோடி இல்லை - இங்கே லேடி இல்லை.
எல்லாம் அவன் செயல். அவன் நாடியவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுக்கிறான். அவன் நாடியவர்களிடமிருந்து அதை பறித்துக் கொள்கிறான். சகல சக்தியும் நிறைந்த அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும். சிந்தித்து பார்க்கிறவர்களுக்கு இந்த திருமறையில் அதிக அத்தாட்சிகள் இருக்கின்றன...
5. நீதயின் கண்களிலிருந்து எவரும் தப்ப முடியாது! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[27 September 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37519
அன்பு சகோதரரே ,ஊடகங்கள் மௌனம் காத்தாலோ அல்லது அது ஊதி பெரிதாக்கினாலோ உண்மையை, நடுநிலைமையை,நேர்மையை நீதியை நெரித்து விட முடியாது!.நசித்துவிட முடியாது!!
தூரப்பார்வையிலிருந்து பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் அது துவண்டுவிடுவது போல் தெரியலாம்! என்றாவது ஒருநாள் உண்மை வாழ்க்கைக்கு அது கை கொடுக்கும் ஏனனில்அது ஒவ்வொருவரின் "நித்திய வாழ்வின் நிழல்"என்ற சித்தாந்தத்தில் வாழும் வழுக்கலில்லா உள்ளத்திற்கு சொந்தக்காரர்கள் என்றும் பயப்படத் தேவையில்லை!
இந்த முதல்வரின் தீர்ப்பு ஒரு முன்மாதிரியே,எப்பேர்பட்ட எத்தனாக இருந்தாலும் அவர் எப்பேர்பட்ட உயர் அரசியல் செவாக்குள்ளவராக இருந்தாலும் ஊழலும்,ஒழுங்கீனமும் உடைய பொது வாழ்கையிலிருந்து பெறப்படும் பொதுசொத்தில் ஒரு பைசாவை பெற்றாலும் அந்த
குற்றதிற்க்குறிய தண்டனையை நீதி தேவதை நிச்சியம் ஏதாவதொரு வழியில் கொடுப்பாள்.அந்த நீதயின் கண்களிலிருந்து எவரும் தப்ப முடியாது இதில் நமக்கு வேண்டப்பட்டவர்,வேண்டப்படாதவர்,நாம் சார்ந்திருக்கும் அமைப்பு,கட்சி,தலைமை என்ற எந்த வேறுபாட்டிற்கும் இடமில்லை
குற்றம் செய்தவன் தண்டிக்கப்படவேண்டும் என்ற சித்தாந்தத்தில் சிறிதளவும் பிசகாதவர்கள் பலபேர் இந்த பூமியிலுள்ளார்கள் அந்தவரிசையில் இந்த ஆதம் சுல்தானும் ஒருவனுமாவான்! .தவறு செய்பவர் எவரையும் தட்டிக்கேட்பதில் தயவு தாட்சன்யமோ,சமரசமோ செய்யாமல் வாழ்ந்துவருபவன் நான். என் வாழ்நாள் முழுதும் இப்படிப்பட்ட வாழ்கையை எனக்கும் என் போன்றோர்களுக்கும் வல்ல அல்லாஹ் வழங்கிடுவானாக ஆமீன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
6. Re:... posted byP.S. ABDUL KADER (KAYALPATNAM)[28 September 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37524
காட்டுமிராண்டித்தனத்தில் ஹிட்லரையும் மிஞ்சி விட்டது. காலை 11 மணிக்கு தானே தீர்ப்பு ஏன் காலதாமதம் ?
எங்கே 11மணிக்கே தீர்ப்பு வாசிக்கப்பட்டு மாலை ஜாமீனுக்கு அப்ளை செய்து வெளியே வந்துவிடுவாரோ என்றே தீர்ப்பு தாமதமாக...இறுதி நேரத்தில் எழுதப்பட்டது . 1மணி 3மணி என்று இறுதி நேரத்தில்தண்டனை அறிவிக்கப்பட்டது .
இன்றுடன் அக்டோபர் 5வரை தசரா விடுமுறை அதுவரை சிறையில்வைக்கவேண்டும்என்றே பழிவாங்கப்பட்டதீர்ப்பு இது அனைத்து எதிரிகளும் சேர்ந்து ஒரு வீர பெண்மணியின்
முதுகில் குத்தும் விதம் இது .தமிழர்கள் உரிமைக்கு போராடிய
தமிழகமுதல்வருக்கு நாமே ஆதரவு அளிக்காமல்
இருந்தால் நியாயமா?
7. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[28 September 2014] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37530
அஸ்ஸலாமு அலைக்கும்
நம் நாட்டின் அரசியலில் இது வெல்லாம் சகஜம் அப்பா ......நாட்டில் நடக்காததையா எங்கள் தலைவி அம்மா அவர்கள் செய்து விட்டார்கள் .....பொதுவாகவே அரசியலில் இது வெல்லாம் ஒன்றுமே இல்லை நம் நாட்டில் .....
நாட்டின் தீர்ப்புக்கு எங்கள் தலைவி அம்மா அவர்கள் தலை வணங்கி இருப்பதில் இருந்து ...எவ்வளவு பெருந்தன்மை என்பதை நாடும் சரி .... மக்களுக்ம் சரி உணர்ந்து இருப்பார்கள் .... எங்கள் தலைவி அம்மா அவர்களின் மதிப்பு பொது மக்கள் மத்தியில் இன்னும் உயர்ந்து விட்டது ....இது தான் உண்மையே .....
தீர்ப்பு என்பது யாவர்களும் மதிப்பு அளிக்க பட வேண்டிய ஒரு மரியாதைக்குரிய செயல் ....
நாளை இன்னும் மற்ற தீர்ப்பு மற்ற கட்சிகளில் இருப்பதை யாவர்களும் அறிவர்கள் '' ஜி...... யை பார்ப்போம் ......
அதிக விரைவில் மரியாதைக்குரிய தலைவி அம்மா அவர்களின் நேரடி கண் பார்வையில் நல்லதோர் தலைமை அமைந்து தமிழக மக்களுக்கு பல .... நல ,, நல்ல ,, திட்டங்கள் வந்து .... தமிழக பொது மக்கள் பலன் பெறுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை .... இது நடக்கும் ...... இதுவும் யாவர்களும் அறிவர் ............பொருத்து இருந்து பார்க்கலாம் ......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross