காயல்பட்டினம் யூஃபா ஜூனியர்ஸ் விளையாட்டுக் குழுவின் சார்பில், 7ஆம் ஆண்டு கால்பந்து சுற்றுப்போட்டி, இம்மாதம் 27ஆம் நாள் துவங்கி, வரும் அக்டோபர் மாதம் 03ஆம் நாள் வரை, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெறுகிறது.
இச்சுற்றுப்போட்டியில், காயல்பட்டினம் யூஃபா ஜூனியர்ஸ், காலரி பேர்ட்ஸ், எல்.கே.மேனிலைப்பள்ளி ஆகிய அணிகளும், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி, வீரபாண்டியன்பட்டினம், புன்னைக்காயல், நாசரேத் அணிகளும் களம் காண்கின்றன.
நேற்று (செப்டம்பர் 27) நடைபெற்ற துவக்கப் போட்டியில், ஆதித்தனார் கல்லூரி அணியும், புன்னைக்காயல் அணியும் மோதின. ஈரணிகளும் இறுதி வரை கோல் அடிக்காததைத் தொடர்ந்து, சமனுடைப்பு முறையில் ஆதித்தனார் கல்லூரி அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, அக்டோபர் 01 அன்று நடைபெறும் அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
நேற்றைய போட்டியில், ஐக்கிய விளையாட்டு சங்க முன்னாள் செயலாளர் எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருக்கு ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இன்று (செப்டம்பர் 28) நடைபெறும் போட்டியில், வீரபாண்டியன்பட்டினம் அணியும், காயல்பட்டினம் காலரி பேர்ட்ஸ் அணியும் மோதவுள்ளன.
தகவல்:
S.B.B.புகாரீ
யூஃபா ஜூனியர்ஸ் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |