தொழில் செய்வதற்காக தையல் இயந்திரம், தேய்ப்புப் பெட்டி ஆகியவை தேவைப்படும் - தகுதியுள்ள சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து பெறப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் பொருளாதார நிலையை மேம்படுத்த – தமிழக அரசு விலையில்லா தையல் இயந்திரம் ஆகியவற்றை வழங்கி வருகிறது.
பயனாளிகள் - பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்களாகவும்,
20 முதல் 45 வயதிற்குட்பட்டவர்களாகவும்,
தையல் இயந்திரம் தேவைப்படுவோர் தையல் கலை அறிந்தவர்களாகவும்,
குடும்ப ஆண்டு வருமானம் - கிராமப்புறமாக இருந்தால் ரூபாய் 40,000க்கு மிகாமலும், நகர்ப்புறமாக இருந்தால் ரூ.60,000க்கு மிகாமலும் இருந்தால், தையல் இயந்திரம் பெற தூத்துக்குடி மாவட்ட பிறப்டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
சலவைத் தொழில் புரியும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த சலவையாளர்களுக்கு, அவர்கள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டிட தேய்ப்புப் பெட்டிகள் வழங்கப்படுகிறது.
கிராமப்புறங்களில் வசிப்போர் ஆண்டு வருமானம் ரூபாய் 40,000க்கு மிகாமலும், நகர்ப்புறங்களில் வசிப்போர் ஆண்டு வருமானம் ரூபாய் 60,000க்கு மிகாமலும் உள்ள தகுதியில் இருந்தால், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் - விலையில்லா தேய்ப்புப் பெட்டிகள் பெற மனு அளிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |