பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து செப்டம்பர் 27 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா - சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர் பதவிகளை இழந்துள்ளார்.
இத்தீர்ப்பைக் கண்டித்து, இன்று (அக்டோபர் 01) காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் உண்ணாவிரதப் போராட்டம், 09.00 மணி முதல் 17.00 மணி வரை நடைபெறுகிறது.
கட்சியின் சிறுபான்மையினர் நலப் பிரிவு தூத்துக்குடி மாவட்ட தலைவர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் தலைமை தாங்கி, நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
கட்சியின் சிறுபான்மையினர் நலப்பிரிவு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் டேனியல் ராஜ், இளைஞர் - இளம்பெண்கள் பாசறை செயலாளர் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பீ.ஆர்.மனோகரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
நகர செயலாளர் எஸ்.எம்.செய்யது காசிம், நகர சிறுபான்மைப் பிரிவு செயலாளர் அப்துல் காதர், மூத்த உறுப்பினர் காயல் மவ்லானா, நகர அவைத்தலைவர் என்.பீ.முத்து, ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் மு.ராமச்சந்திரன், அதன் நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர், நகர துணைச் செயலாளர் கே.ஏ.செய்கு அப்துல் காதிர், நிர்வாகி சி.ஆர்.முத்தையா, மாவட்ட பொருளாளர் எம்.ஜெபமாலை, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், நகர்மன்ற முன்னாள் தலைவர் அ.வஹீதா, சமத்துவ மக்கள் கட்சி நகர செயலாளர் அப்துல் அஜீஸ் உட்பட - அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும், அங்கத்தினரும் இப்போராட்டத்தில், தமது சட்டைகளில் கருப்புப் பட்டை அணிந்தவர்களாக, திரளாகக் கலந்துகொண்டனர்.
களத்தொகுப்பு & படங்கள்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
அதிமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |