காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புறங்களில், கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் நாளன்று நண்பகல் 11.45 மணியளவில் சிறு மழை சில நிமிடங்கள் பெய்தது. அதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாலை 04.55 மணி துவங்கி 06.00 மணி வரை இடி, மின்னலுடன் இதமான மழை பெய்துள்ளது.
இம்மழை காரணமாக, நகரின் தாழ்வான வீதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்திலும், அதனைச் சுற்றியும் மழை நீர் தேங்கியுள்ள காட்சிகள்:-
இன்று 13.45 மணி நிலவரப்படி, நகரில் வெயில் வீசியபோதிலும், அதிகாலையில் பெய்த மழை காரணமாக வானிலை இதமாக உள்ளது.
படங்கள்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
காயல்பட்டினத்தில் இதற்கு முன் மழை பெய்தது குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஐக்கிய விளையாட்டு சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |