பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து செப்டம்பர் 27 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா - சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர் பதவிகளை இழந்துள்ளார்.
இத்தீர்ப்பைக் கண்டித்து, இன்று (அக்டோபர் 03) காயல்பட்டினம் கற்புடையார்பள்ளி வட்டம் (சிங்கித்துறை) மீனவ மக்கள் கடலில் இறங்கிப் போராட்டம் நடத்தினர்.
அதிமுக தூத்துக்குடி மாவட்ட மீனவரணி துணைச் செயலாளர் அந்தோணி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தை, தூத்துக்குடி மாவட்ட மீனவரணி செயலாளர் டார்சன் துவக்கிவைத்தார்.
கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் எம்.ஜெபமாலை, மாவட்ட முன்னாள் செயலாளர் காயல் மவ்லானா, சிறுபான்மைப் பிரிவு மாவட்ட தலைவர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம், நகர துணைச் செயலாளர் கே.ஏ.ஷெய்கு அப்துல் காதிர், ஜெயலலிதா பேரவை காயல்பட்டினம் நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர், நகர அவைத்தலைவர் என்.பீ.முத்து, நகர்மன்ற உறுப்பினர் ஜெ.அந்தோணி, அம்பேத்கர் பேரவை செயலாளர் அண்டன் சிங் துரை, அதிமுக இளைஞரணி நகர துணைச் செயலாளர் இளந்தளிர் முத்து, ம.அமலக்கனி மற்றும் பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
பின்னர், அனைவரும் கடலில் இறங்கிய நிலையில், ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர். மீனவ மக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
அதிமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |