காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் சார்பில், இன்று (அக்டோபர் 04) ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது..
பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) நிர்வாகத்தின் சார்பில், இன்று காலை 07.30 மணியளவில் காயல்பட்டினம் கடற்கரையில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் ஏ.எஸ்.நெய்னா முஹம்மத் தொழுகையை வழிநடத்த, அதன் கத்தீபும் - ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ குத்பா பேருரையாற்றினார்.
இந்நிகழ்வுகளில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, அதன் முன்னாள் தலைவர் எஸ்.ஐ.தஸ்தகீர், துணைத்தலைவர் டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், செயலாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் முஹ்ஸின் (முர்ஷித்), எம்.எஸ்.கே.எஸ்.மரைக்கார் என்ற சி.எம்.கே., கரூர் ட்ரேடர்ஸ் ஹஸன், எம்.என்.எம்.ஐ.மக்கீ, எஸ்.எம்.அமானுல்லாஹ், எஸ்.ஓ.கியாத், எம்.எஸ்.கே.எஸ்.மரைக்கார் என்ற சி.எம்.கே., துணி உமர், எஸ்.எச்.லுத்ஃபீ, கே.எம்.முஹம்மத் தம்பி, எம்.ஏ.அப்துல் ஜப்பார், டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், எழுத்தாளர்களான கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப், சாளை பஷீர், எம்.எஸ்.அப்துல் ஹமீத், சமூக நல்லிணக்க மையம் (தஃவா சென்டர்) தலைவர் எம்.ஏ.புகாரீ (48), அதன் பொருளாளர் ஹாஃபிழ் எம்.ஏ.முஹம்மத் ஃபாயிஸ், தம்மாம் காயல் நற்பணி மன்ற துணைத்தலைவர் சாளை ஜியாவுத்தீன் உட்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். தொழுகை - குத்பா பேருரை நிறைவுற்றதும், பொதுமக்கள் கட்டித்தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
இத்தொழுகையின்போது, ஏழைகள் துயர் துடைக்கும் ஐ.ஐ.எம். பைத்துல்மால் அறக்கட்டளைக்காக
ஆண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 70,302 தொகையும்,
பெண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 69,950 தொகையும் என
மொத்தம் ரூபாய் 1,40,252 தொகை நிதியும், ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசும் பொதுமக்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்டது.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
மற்றும்
HYLEE
ஐ.ஐ.எம். சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) காயல்பட்டினம் கடற்கரையில் நடத்தப்பட்ட ஹஜ் பெருநாள் தொழுகை குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஐ.ஐ.எம். தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 17:10 / 04.10.2014] |