ஓமன் நாட்டில் இன்று (அக்டோபர் 04) ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது. அந்நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் வசிக்கும் காயலர்கள் சிலர், அங்குள்ள முலத்தா ஈத்கா - பெருநாள் திடலில், அதிகாலை 06.30 மணியளவில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
பின்னர் அவர்களும், மேலப்பாளையத்தைச் சேர்ந்த அவர்களது நண்பர்களும் ஒன்றுகூடி, தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
தகவல் & படங்கள்:
மஸ்கட்டிலிருந்து...
ஹாஃபிழ் K.M.N.முஹம்மத் அபூபக்கர்
ஹிஜ்ரீ 1432இல், ஓமன் காயலர்களின் நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |