காயல்பட்டினத்தில் ஐசிஐசிஐ வங்கியின் ஏடீஎம் சேவை, வங்கி இருப்பிடத்தில் 2, அப்பாபள்ளித் தெரு வடமுனையில் 1 என மொத்தம் 3 இடங்களில் நிறுவப்பட்டுள்ளது.
வங்கியையொட்டிய ஏடீஎம் கருவிகளில், திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறி, தற்காலிகமாக சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஹஜ் பெருநாளை முன்னிட்டு, நகரில் அதிகளவில் பணப்பரிமாற்றம் இருக்கும் இக்காலகட்டத்தில் இவ்விரு ஏடீஎம் சேவைகளும் இயங்காததால், அப்பாபள்ளித் தெருவிலுள்ள ஏடீஎம் சேவையைப் பயன்படுத்தச் சென்றபோது, அங்கே ஏடீஎம் கருவி அமைந்துள்ள அறை முக்கால் ஷட்டர் பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. அந்த இயந்திரத்தில் பணம் இல்லை என்று கூறி வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.
தகவல் & படங்கள்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
ஐசிஐசிஐ வங்கி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |