சீனாவில், இன்று (அக்டோபர் 05 - ஞாயிற்றுக்கிழமை) ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
தென்சீனாவின் குவாங்ஜோ நகரில், நபித்தோழர் அபீவக்காஸ் பள்ளிவாசலில் இன்று காலை 08.00 மணி, 09.00 மணிக்கு இரண்டு கட்டங்களாக பெருநாள் தொழுகை நடைபெற்றது.
பன்னாட்டு முஸ்லிம்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்ட இத்தொழுகைகளில், காயல்பட்டினம் - கீழக்கரை பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
தொழுகை நிறைவுற்ற பின்னர், பள்ளியருகிலுள்ள அல்மக்காஹ் ஓய்வுணவகத்தில் நடைபெற்ற விருந்துபசரிப்பு நிகழ்ச்சியிலும் அவர்கள் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
தென்சீனாவிலிருந்து...
V.D.சதக்கு தம்பி
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) ஹஜ் பெருநாளின்போது, தென்சீனா காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |