ஹஜ் பெருநாளையொட்டி பெருநாளன்றும், அதற்கடுத்த - அய்யாமுத் தஷ்ரீக் என்றழைக்கப்படும் மூன்று நாட்களிலும், ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை அறுத்துப்பலியிடுவது இஸ்லாம் வலியுறுத்திய ஒரு கிரியையாகும்.
ஆட்டுக்கு ஒருவரும், மாடு மற்றும் ஒட்டகத்திற்கு ஏழு பேரும் பங்குதாரர்களாக இருக்கலாம். அறுக்கப்படும் அப்பிராணிகளின் இறைச்சியை குடும்பத் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக, உற்றார் - உறவினருக்கும், ஏழை - எளியோருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் நகரின் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக, கூட்டு முறையில் உள்ஹிய்யா கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) சார்பில், மாடு பங்கு ஒன்றுக்கு ரூ.2500/- என தொகை நிர்ணயிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இன்று காயல்பட்டினம் குட்டியா பள்ளியில் திடலில், அதிகாலையில் துவங்கி நண்பகல் 12.30 மணி வரை முதற்கட்டமாக 23 மாடுகள் உள்ஹிய்யா கொடுக்கப்பட்டுள்ளன.
ஏற்பாடுகளை, எம்.என்.எம்.ஐ.மக்கீ, எம்.ஏ.புகாரீ, எஸ்.எம்.அமானுல்லாஹ், ‘ஜப்பான்’ முஹம்மத் முஹ்யித்தீன், எஸ்.எச்.லுத்ஃபீ, எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத், எம்.எல்.செய்யித் இப்றாஹீம் எஸ்.கே., செய்யித் அபூதாஹிர் சுல்தான் ஆகியோர் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர். இறுதிகட்ட உள்ஹிய்யா வரும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 07) அன்று நிறைவேற்றப்பட்டவுள்ளது.
ஐ.ஐ.எம். தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|