தாய்லாந்து நாட்டில் இம்மாதம் 05ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று (நேற்று) ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலுள்ள பாங்காக் மஸ்ஜிதில் ஹஜ் பெருநாள் தொழுகை, காலை 09.15 மணியளவில் கூட்டாக நடத்தப்பட்டது. ஆண்கள் - பெண்கள் என சுமார் 1,000 பேர் இத்தொழுகையில் பங்கேற்றனர்.
தொழுகை நிறைவுற்றதும் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்களுடன் இணைந்தும், பின்னர் காயலர்கள் தனித்தும் ஒன்றுகூடி தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர். பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்க அங்கத்தினரும் இந்த ஒன்றுகூடலில் இணைந்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
முன்னதாக, பெருநாளுக்கு முந்திய நாள் (அக்டோபர் 04) இரவில் SINCERE LANKA இல்லத்தில் திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது.
தகவல் மற்றும் படங்கள்:
தாய்லாந்திலிருந்து...
கம்பல்பக்ஷ் அஹ்மத் இர்ஃபான்
பாங்காக், தாய்லாந்து
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) தாய்லாந்து காயலர்களின் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |