ஹஜ் பெருநாளையொட்டி பெருநாளன்றும், அதற்கடுத்த - அய்யாமுத் தஷ்ரீக் என்றழைக்கப்படும் மூன்று நாட்களிலும், ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை அறுத்துப்பலியிடுவது இஸ்லாம் வலியுறுத்திய ஒரு கிரியையாகும்.
ஆட்டுக்கு ஒருவரும், மாடு மற்றும் ஒட்டகத்திற்கு ஏழு பேரும் பங்குதாரர்களாக இருக்கலாம். அறுக்கப்படும் அப்பிராணிகளின் இறைச்சியை குடும்பத் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக, உற்றார் - உறவினருக்கும், ஏழை - எளியோருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் நகரின் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக, கூட்டு முறையில் உள்ஹிய்யா கொடுக்கப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் ஜாவியாவில் கூட்டு முறை உள்ஹிய்யா திட்டத்தின்கீழ் இன்று முதல் 3 நாட்களுக்கு உள்ஹிய்யா கொடுக்கப்படுகிறது. இவ்வாண்டு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பதிவு செய்தவர்களின் பங்குகள் பற்றிய விபரங்கள், ஜாவியாவின் www.kayalpatnamzaviya.com என்ற இணையதளத்தில் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வருவதாகவும், பங்குதாரர்கள் தம் பங்கு நிறைவேற்றப்பட்டு விட்டதற்கான விபரங்களை அதிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஜாவியா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
மவ்லவீ ஹாஃபிழ் M.S.அபுல்ஹஸன் நுஸ்கீ ஃபாஸீ
ஜாவியா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 16:14 / 07.10.2014]
|