மேற்கு வங்க மாநிலத்தில் இம்மாதம் 06ஆம் நாளன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. பெருநாளை முன்னிட்டு, ஜக்கரிய்யா தெருவிலுள்ள படா மஸ்ஜித் எனும் பெரிய பள்ளிவாசலில் நேற்று அதிகாலை 06.45 மணிக்கு பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. இத்தொழுகையில் காயலர்கள் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
காலை 09.30 மணியளவில், காயலர் ஒருவரின் இல்லத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகையை, காயல்பட்டினம் தீவுத்தெருவைச் சேர்ந்த அப்துல் காதிர் வழிநடத்தி, குத்பா பேருரையாற்றினார். இதில், காயல்பட்டினம் - கீழக்கரையைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
தொழுகை நிறைவுற்ற பின்னர் அனைவரும் ஒன்றுகூடி, தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
கோல்கத்தாவிலிருந்து...
தகவல் & படங்கள்:
கம்பல்பக்ஷ் B.S.ஷாஹுல் ஹமீத்
கோல்கத்தாவில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) ஹஜ் பெருநாள் தொழுகை குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |