ஹாங்காங் நாட்டில் இன்று (அக்டோபர் 05) ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது. அந்நாட்டில் வசிக்கும் காயலர்கள், அங்குள்ள கவ்லூன் பள்ளிவாசலில் காலை 07.00 மணி, 09.30 மணி என இரண்டு விடுத்தங்களாக பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். முதலாவதாக நடைபெற்ற குத்பா மற்றும் தொழுகையை - பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ நடத்தினார். இரண்டாவதாக நடைபெற்ற குத்பா மற்றும் தொழுகையை கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் வழிநடத்தினார்.
தொழுகை நிறைவுற்றதும் அவர்கள் ஒன்றுகூடி, தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
ஹஜ் பெருநாளை முன்னிட்டு, முன்னதாக நேற்று (அக்டோபர் 04) இரவில் கவ்லூன் பள்ளி இரண்டாவது தளத்தில் திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது.
தகவல் & படங்கள்:
ஹாங்காங்கிலிருந்து...
அப்துல் காதிர்
மற்றும்
ஹாஃபிழ் A.L.இர்ஷாத் அலீ
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) ஹாங்காங் காயலர்களின் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |