ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் இன்று (அக்டோபர் 04) ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது. அந்நாட்டின் துபை நகரில் வசிக்கும் காயலர்கள், துபை - தேராவிலுள்ள ஈத்கா திடலில் இன்று அதிகாலை 06.30 மணியளவில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். பின்னர் அவர்கள் ஒன்றுகூடி, தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
வேறு சில காயலர்கள், துபை Masjid Al Nahda எனும் நஹ்தா பெரிய பள்ளிவாசலில் இன்று அதிகாலை 06.30 மணியளவில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். துபை, அபூதபீ, அஜ்மான் பகுதிகளில் வசிக்கும் காயலர்கள் இத்தொழுகையில் அனைவருடனும் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் ஒன்றுகூடி, தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
தகவல் & படங்கள்:
துபையிலிருந்து...
‘துணி’ அன்ஸாரீ
மற்றும்
A.H.முஹம்மத் ஸிராஜுத்தீன்
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) துபை காயலர்களின் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |