சஊதி அரபிய்யா நாட்டில் இன்று (அக்டோபர் 04) ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது. அந்நாட்டின் தலைநகர் ரியாத் நகரில் வசிக்கும் சுமார் 10 காயலர்கள், ரியாத் - பத்தா பகுதியில், அருங்காட்சியகம் அருகிலுள்ள அப்துல் அஜீஸ் பள்ளியில் இன்று அதிகாலை 06.00 மணியளவில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
பின்னர் அவர்கள் ஒன்றுகூடி, தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர். லால்பேட்டை நகரைச் சேர்ந்தவர்களும், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இம்மகிழ்ச்சியில் இணைந்து பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்:
ரியாதிலிருந்து...
ராவன்னா மீரான்
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) ரியாத் காயலர்களின் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |