நடப்பாண்டு ஹஜ் பெருநாளை முன்னிட்டு, சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில், காயல்பட்டினத்திலுள்ள ஏழை-எளிய 107 குடும்பங்களுக்கு, தலா ரூபாய் 1 ஆயிரத்து 650 மதிப்பில், மொத்தம் ரூபாய் 1 லட்சத்து 76 ஆயிரத்து 550 ரூபாய் செலவில் - அத்தியாவசிய சமையல் பொருட்கள் உதவியாக வழங்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் காயல் நல மன்ற உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான், அதன் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எஃப்.ஃபஸல் இஸ்மாஈல், சமூக ஆர்வலர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை ஆகியோரிணைந்து அப்பொருட்களை பயனாளிகளின் இல்லங்களுக்குத் தேடிச் சென்று வழங்கியுள்ளனர்.
தகவல் & படங்கள்:
K.M.T.சுலைமான்
உள்ளூர் பிரதிநிதி - சிங்கை காயல் நல மன்றம்
சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் இதற்கு முன் அத்தியவாசிய சமையல் பொருட்கள் வினியோகிக்கப்பட்ட செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கப்பூர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |