காயல்பட்டினம் யூஃபா ஜூனியர்ஸ் விளையாட்டுக் குழுவின் சார்பில், 7ஆம் ஆண்டு கால்பந்து சுற்றுப்போட்டி, இம்மாதம் 27ஆம் நாள் துவங்கி, வரும் அக்டோபர் மாதம் 03ஆம் நாள் வரை, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெறுகிறது.
இச்சுற்றுப்போட்டியில், காயல்பட்டினம் யூஃபா ஜூனியர்ஸ், காலரி பேர்ட்ஸ், எல்.கே.மேனிலைப்பள்ளி ஆகிய அணிகளும், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி, வீரபாண்டியன்பட்டினம், புன்னைக்காயல், நாசரேத் அணிகளும் பங்கேற்றுள்ளன.
இம்மாதம் 02ஆம் நாள் வியாழக்கிழமை (நேற்று) மாலையில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணியை எதிர்த்து விளையாடிய நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி அணி, 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இறுதிப்போட்டியில் அவ்வணி, ஏற்கனவே இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள காயல்பட்டினம் காலரி பேர்ட்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இன்று மாலையில் இறுதிப்போட்டி நடைபெறவிருந்தது. போட்டி நடைபெறும் இடமான காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தில், மழை நீர் தேங்கியுள்ளதன் காரணமாக இன்றைய இப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல் & படங்கள்:
S.B.B.புகாரீ
யூஃபா ஜூனியர்ஸ் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |