காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் முவ்வொலி நாதாக்களின் 403ஆவது கந்தூரி வைபவம் 25.09.2014 முதல் 02.10.2014 சனிக்கிழமை வரை நடைபெற்றது.
25.09.2011 அன்று மாலையில் கொடியேற்றத்துடன் துவங்கிய இவ்வைபவத்தில், அன்றாடம் அதிகாலை சுப்ஹு தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்யப்பட்டது. அன்றாட 20.30 மணிக்கு மார்க்க அறிஞர்களால் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டது.
25.09.2014 வியாழக்கிழமையன்று, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி ஆசிரியர் மவ்லவீ ஏ.எச்.எம்.ஏ.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, ‘முவ்வொலி நாதாக்களின் சரித்திரமும், உள்ஹிய்யாவின் சிறப்புகளும்’ எனும் தலைப்பில் உரையாற்றினார்.
26.09.2014 வெள்ளிக்கிழமையன்று, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, ‘இஸ்லாம் கூறும் மனிதநேயம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார்.
27.09.2014 சனிக்கிழமையன்று, கன்னியாகுமரி மாவட்டம் - இணையம் கோட்டாறு ஜும்ஆ பள்ளியின் கத்தீப் மவ்லவீ பீ.ஷரஃபுத்தீன் ஃபைஜீ, ‘இறையச்சம்’ எனும் தலைப்பிலும்,
காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் இமாமும், அதன் மக்தப் சுபுஹானிய்யாவின் ஆசிரியருமான மவ்லவீ ஹாஃபிழ் எம்.இசட்.முஹம்மத் அப்துல் காதிர் மஸ்லஹீ, ‘ஈருலகப் பேரரசரின் ஈடில்லா ஸலவாத்’ எனும் தலைப்பிலும் உரையாற்றினர்.
28.09.2014 ஞாயிற்றுக்கிழமையன்று, அல்மத்ரஸத்துஸ் ஸுபுஹானிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ எம்.ஏ.எஸ்.ஏ.செய்யித் முஹம்மத் மன்பஈ, ‘சர்தார் நபியின் சக்திவாய்ந்த பிரார்த்தனைகள்’ எனும் தலைப்பில் உரையாற்றினார்.
29.09.2014 திங்கட்கிழமையன்று, மவ்லவீ எஸ்.எம்.எச்.முஹம்மத் அலீ ஸைஃபுத்தீன் ரஹ்மானீ ஃகலீஃபத்துல் காதிரீ ஸூஃபீ, ‘அவ்லியாக்களின் அகமியம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார்.
30.09.2014 செவ்வாய்க்கிழமையன்று, கே.எம்.நூஹ் முஹ்யித்தீன் மஹ்ழரீ உலவீ ஸூஃபீ, ‘ஸிஹ்ர் - சூனியம் பற்றி குர்ஆன் ஷரீஃப் கூறுவது’ எனும் தலைப்பில் உரையாற்றினார்.
01.10.2014 புதன்கிழமையன்று, காயல்பட்டினம் மஸ்ஜித் ஷெய்கு ஸலாஹுத்தீன் - மேலப்பள்ளியின் இமாம் மவ்லவீ எம்.டீ.ஷெய்க் அப்துல் காதிர் ஸூஃபீ ஜமாலீ, ‘பிஸ்மியின் மகத்துவம்’ எனும் தலைப்பிலும்,
குரும்பூர் முஹ்யித்தீன் ஜும்ஆ பள்ளியின் இமாம் மவ்லவீ எம்.முஹம்மத் ஸலீம் ஃபைஜீ, ‘சர்தார் நபி சாதாரண மனிதரா?’ எனும் தலைப்பிலும் உரையாற்றினர்.
02.10.2014 வியாழக்கிழமையன்று மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின் மவ்லித் மஜ்லிஸும், மஃரிப் தொழுகைக்குப் பின் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸும் நடைபெற்றன.
அன்று 20.30 மணியளவில், திருவிதாங்கோடு ஜாமிஉல் அன்வர் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் எம்.நிஜாமுத்தீன் ஃபாழில் அஹ்ஸனீ, ‘இன்றைய இளைஞர்களுக்கு இஸ்லாம் கூறும் நெறிமுறைகள்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
03.10.2014 வெள்ளிக்கிழமை காலை 06.00 மணி முதல் 08.00 மணி வரை நேர்ச்சை வினியோகம் நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் முவ்வொலி நாதாக்கள் கந்தூரி கமிட்டியின் தலைவர் கே.எஸ்.எம்.ஃபாரூக், துணைத்தலைவர் எஸ்.எம்.ஏ.முஸ்தஃபா நெய்னா, செயலாளர் எம்.டீ.முஹம்மத் அபூஸாலிஹ், துணைச் செயலாளர்களான எம்.என்.ஸதக்கத்துல்லாஹ், மவ்லவீ எம்.இசட்.முஹம்மத் அப்துல் காதிர் மஸ்லஹீ ஆகியோர் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.
முவ்வொலி நாதாக்கள் கந்தூரி தொடர்பான பிரசுரங்கள்:-
படங்களில் உதவி:
அப்துர்ரஊஃப்
ஒளிப்பதிவாளர், முஹ்யித்தீன் டீவி, காயல்பட்டினம்.
காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியின் முவ்வொலி நாதாக்கள் கந்தூரி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |