மஹாராஷ்டிர மாநிலம் - மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு, இந்தியாவின் 12 மாநிலங்களில் (காயல்பட்டினம் உட்பட) 22 கிளைகளுடன் இயங்கி வருகிறது ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கம் லிட். நிறுவனம்.
இந்நிறுவனத்தின் கிளை காயல்பட்டினத்தில் கடந்த ஜூன் மாதம் 04ஆம் நாளன்று துவக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஜன்சேவா குறித்து பொதுமக்களுக்கு அவ்வப்போது விளக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், இம்மாதம் 07ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று 17.00 மணியளவில், காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியில், ‘ஜன்சேவா - ஏன், எதற்கு?’ எனும் தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறவுள்ளது.
சென்னை புதுக்கல்லூரியின் பொருளியல் துறை பணி நிறைவுபெற்ற பேராசிரியர் முனைவர் அப்துல் ரஹ்மான் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
ஆண் - பெண் இரு பாலருக்கும் தனித்தனி இட வசதிகளுடன் நடத்தப்படவுள்ள இக்கூட்டத்தில் அனைவரும் பங்கேற்குமாறு அந்நிறுவனத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த பிரசுரம் வருமாறு:-
தகவல்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
ஜன்சேவா குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |