காயல்பட்டினம் யூஃபா ஜூனியர்ஸ் விளையாட்டுக் குழுவின் சார்பில், 7ஆம் ஆண்டு கால்பந்து சுற்றுப்போட்டி, இம்மாதம் 27ஆம் நாள் துவங்கி, வரும் அக்டோபர் மாதம் 03ஆம் நாள் வரை, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெறுகிறது.
இச்சுற்றுப்போட்டியில், காயல்பட்டினம் யூ, பா ஜூனியர்ஸ், காலரி பேர்ட்ஸ், எல்.கே.மேனிலைப்பள்ளி ஆகிய அணிகளும், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி, வீரபாண்டியன்பட்டினம், புன்னைக்காயல், நாசரேத் அணிகளும் களம் காண்கின்றன.
செப்டம்பர் 29 அன்று மழை காரணமாக போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. செப்டம்பர் 30 அன்று (நேற்று) நடைபெற்ற 3ஆவது போட்டியில், தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரி அணியும், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணியும் மோதின. இதில், எல்.கே.மேனிலைப்பள்ளி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற 4ஆவது போட்டியில், நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி அணி, காயல்பட்டினம் யூஃபா ஜூனியர்ஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
இன்று முதலாவது அரையிறுதிப்போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி அணியும், காயல்பட்டினம் காலரி பேர்ட்ஸ் அணியும் மோதுகின்றன.
நாளை (அக்டோபர் 02) நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணியும், நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி அணியும் மோதுகின்றன.
தகவல்:
S.B.B.புகாரீ
யூஃபா ஜூனியர்ஸ் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |