காயல்பட்டினம் புறவழிச் சாலையில், தனியாருக்குச் சொந்தமான நிலப்பரப்பில், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் குவிக்கப்பட்டுள்ள - கெட்டுப்போன கடல் சங்குகளை உடனடியாக அகற்றித் தரக் கோரியும், அதற்குக் காரணமான தனியார் சங்கு வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், இன்று நண்பகல் 12.00 மணியளவில், காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமுமுக தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் முஹ்ஸின் ‘முர்ஷித்’, மமக நகர நிர்வாகிகளான ஜாஹிர் ஹுஸைன், எம்.ஐ.ஏ.காதர், எம்.ஏ.ஆஸாத், எஸ்.ஐ.கே.ஐதுரூஸ், ஏ.ஆர்.ஷாஹுல் ஹமீத், எஸ்.டீ.இப்றாஹீம், எம்.ஏ.கே.ஹஸன், எம்.ஏ.முஜீபுர்ரஹ்மான் மற்றும் எல்.டீ.சித்தீக், எம்.என்.அஹ்மத் ஸாஹிப் ஆகியோர் இணைந்து இம்மனுவை அளித்தனர்.
களத்தொகுப்பு & படங்கள்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
படங்களுள் உதவி:
M.K.ஜாஹிர் ஹுஸைன்
தமுமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|