காயல்பட்டினம் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் நீண்ட காலமாக மழை பெய்யாமலிருந்தது. அவ்வப்போது பெய்த மழையும் தொலைக்காட்சி பற்பசை விளம்பரம் போல 10 விநாடிகளிலோ, சில மணித்துளிகளிலோ நின்றுபோனது. இதன் காரணமாக, மழை மீதான பொதுமக்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கியது. மழை வேண்டி பல கட்டங்களிலும் பல்வேறு பிரார்த்தனைகளும் நடைபெற்றன.
இந்நிலையில், இன்று அதிகாலை 05.00 மணி துவங்கி 06.00 மணி வரை காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் - இடி, மின்னலுடன் இதமான மழை பெய்து அனைவர் மனதையும் குளிர்வித்துள்ளது.
இம்மழை காரணமாக, நகரின் தாழ்வான வீதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
மழை பெய்கையில் சதுக்கைத் தெருவில்...
குத்துக்கல் தெரு வட பகுதியில்...
குத்துக்கல் தெரு - காட்டு தைக்கா தெரு குறுக்குச் சாலையில்...
காட்டு தைக்கா தெரு அரூஸிய்யா பள்ளியருகில்...
கூலக்கடை பஜாரில்...
பெரிய தெரு - இந்தியன் ஓவர்சீஸ் வங்கியருகில்...
ஆறாம்பள்ளித் தெருவில்...
கி.மு.கச்சேரி தெருவில்...
இன்று நண்பகல் 12.00 மணி நிலவரப்படி, நகரில் வெயில் வீசியபோதிலும், அதிகாலையில் பெய்த மழை காரணமாக வானிலை இதமாக உள்ளது.
படங்களில் உதவி:
ஹாஃபிழ் K.M.முஹம்மத் இஸ்மாஈல் (முத்து இஸ்மாஈல்)
கொச்சியார் தெரு – காயல்பட்டினம்
மற்றும்
சாளை பஷீர்
காயல்பட்டினத்தில் இதற்கு முன் மழை பெய்தது குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டன @ 07:03 / 30.09.2014] |