பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து இன்று (செப்டம்பர் 27) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினத்தில் இன்று 17.00 மணி நிலவரப்படி, பெரும்பாலும் கடைகள் திறந்தே உள்ளன. பதட்டச் சூழல் உருவாவதற்கு முன் திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டுவிட்ட பேருந்துகள் அடைக்கலபுரம், காயல்பட்டினம் வழியே சேருமிடம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன.
திருச்செந்தூரிலிருந்து புறப்படும் பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வேன் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ளன. திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடி வரை அரிதாக இயக்கப்படும் வேன்களில் காயல்பட்டினம் பொதுமக்களும் ஊர் வந்து கொண்டிருக்கின்றனர். வெளியூர்களைச் சேர்ந்தோர் காயல்பட்டினத்திலிருந்து அதே வாகனங்களில் புறப்பட்டுக் கொண்டும் உள்ளனர்.
நகரில் கடைகள் பெரும்பாலும் திறந்துள்ளன. விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் இல்லை.
|