காயல்பட்டினம் பஞ்சாயத் வீதியில், மஸ்ஜித் ஜீலானீ எனும் பெயரில் புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டு வந்தது. கட்டி முடிக்கப்பட்ட இப்பள்ளிவாசல், வரும் அக்டோபர் மாதம் 03ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று 17.00 மணியளவில் திறப்பு விழா காணவுள்ளது.
காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளி தலைவர் எஸ்.ஏ.முஹம்மத் அலீ பள்ளிவாசலைத் திறந்து வைக்கிறார். பின்னர், பள்ளி காணிக்கைத் தொழுகை நடத்தப்பட்டு, முன்னோர்களுக்காக கத்முல் குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்யப்படுகிறது.
மஃரிப் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளி கத்தீப் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ ஆகியோர் மார்க்க சொற்பொழிவாற்றவுள்ளனர்.
அனைத்து நிகழ்ச்சிகளிலும், அனைவரும் திரளாகக் கலந்துகொள்ளுமாறு பள்ளியின் நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. திறப்பு விழா அழைப்பிதழ்:-
இப்பகுதி மக்கள் மஸ்ஜித் மீக்காஈல் - இரட்டை குளத்துப் பள்ளி, முஹ்யித்தீன் பள்ளி ஆகிய பள்ளிகளில் தொழுது வந்ததும், குடியிருப்புகள் அதிகமானதையடுத்து, அருகிலேயே பள்ளி கட்ட தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் இப்பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
படம்:
M.ஜஹாங்கீர்
மஸ்ஜித் ஜீலானீ பள்ளிவாசல் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |