வரும் அக்டோபர் மாதம் 05ஆம் நாளன்று அரஃபா நாளென்றும், அக்டோபர் 06ஆம் நாளன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் என்றும், தமிழக அரசின் தலைமை காழீ (காஜி) முஃப்தீ ஸலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகம் ஆகியன தகவல் தெரிவித்துள்ளன.
இவர்களிடம் இதுகுறித்து காயல்பட்டணம்.காம் தனித்தனியே வினவியது. அப்போது தெரிவிக்கப்பட்டதாவது:-
செப்டம்பர் 25ஆம் நாள் பின்னிரவில் துல்ஹஜ் தலைப்பிறை காணப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பிறை பார்க்கப்பட்ட தகவல் எங்கிருந்தும் பெறப்படவில்லையென்பதால், துல்கஃதா மாதம் 30 நாட்களாகப் பூர்த்தி செய்யப்படுவதாகவும், அதனடிப்படையில் - அக்டோபர் 05ஆம் நாளன்று அரஃபா, 06ஆம் நாளன்று ஹஜ் பெருநாள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஹஜ் பெருநாள் குறித்து, இன்று மாலையில், தமிழக அரசின் தலைமை காழீயால் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு:-
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட ஹஜ் பெருநாள் அறிவிப்பு குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 18:06 / 26.09.2014] |