| |
செய்தி எண் (ID #) 14573 | | | வியாழன், செப்டம்பர் 25, 2014 | நகராட்சி நடத்திய திடீர் சோதனையில், 7.5 கிலோ தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பைகள் பறிமுதல்! ரூ.1350 அபராதம்!! | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 3227 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
காயல்பட்டினம் நகராட்சியால், நகரிலுள்ள கடைகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், 7.5 கிலோ தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், மொத்தம் ஆயிரத்து 350 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் தலைமையிலான குழுவினர், நகரிலுள்ள 23 கடைகளில் இம்மாதம் 24ஆம் நாள் புதன்கிழமையன்று (நேற்று) திடீர் சோதனை நடத்தினர்.
மொத்தம் 23 கடைகளில் நடத்தப்பட்ட இச்சோதனையில், 40 மைக்ரானுக்கும் குறைவான அளவில் தயாரிக்கப்பட்ட ப்ளாஸ்டிக் பைகள் மற்றும் கோப்பைகள் வணிகர்களால் பயன்படுத்தப்படுவதைக் கண்டறியப்பட்டு, 7.5 கிலோ எடை அளவிலான பொருட்கள் உடனடியாக கைப்பற்றப்பட்டதுடன், இக்கடைகளுக்கு மொத்தமாக ஆயிரத்து 350 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இச்சோதனையில், காயல்பட்டினம் நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லெட்சுமி மற்றும் பணியாளர்கள் இணைந்து பணியாற்றினர்.
நகராட்சியின் திடீர் சோதனை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|