துல்ஹஜ் (1435) மாத அமாவாசை செப்டம்பர் 24 புதன்கிழமை அன்று - இங்கிலாந்து நேரப்படி காலை 6:13 மணி அளவில் ஏற்படுகிறது.
அப்போது இந்திய நேரம் செப்டம்பர் 24 புதன்கிழமை மதியம் 11:43.
செப்டம்பர் 24 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:13 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:16. பிறையின் வயது 6.5 மணி
நேரம். சூரியன் மறைந்து 3 நிமிடங்கள் கழித்து சந்திரன் மறைவதாலும், சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பதாலும், அன்று -
காயல்பட்டினத்தில் பிறையை வெறுங்கண்கள் கொண்டு காண இயலாது.
செப்டம்பர் 24 அன்று வானிலை சூழல் தெளிவாக இருந்தால், தென் பசிபிக் கடலின் மேற்கு பகுதியிலும், தொலை நோக்கிகளின் உதவிக்கொண்டு -
தென் அமெரிக்க கண்டத்திலும், அருகாமை கடல் பகுதியிலும் பிறையை காணலாம்.
செப்டம்பர் 25 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:12 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:58. சூரியன் மறையும்போது
சந்திரனின் வயது 30.5 மணி நேரம். சூரியன் மறைந்து வானில் 46 நிமிடம் வரை பிறை இருக்கும். வெறுங்கண்கள் கொண்டு காயல்பட்டினத்தில்
அன்று பிறையை எளிதாக காணலாம்.
கனடா நாட்டின் வட பகுதி, ஐரோப்பா கண்டத்தின் வட பகுதி, சீனாவின் வட பகுதி ஆகியவற்றில் தொலை நோக்கிகள் உதவிக்கொண்டும், உலகின்
இதர பகுதிகளில் வெறுங்கண்கள் கொண்டு பிறையை - செப்டம்பர் 25 அன்று காணலாம்.
பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ளவர்களில் - கேரளாவை தலைமையகமாக கொண்டு செயல்புரியும் ஹிஜ்ரி குழுவினை
பின்பற்றுவோருக்கு செப்டம்பர் 25 - துல்ஹஜ் 1 ஆகும். அவர்களுக்கு - அரபா தினம் - அக்டோபர் 3, ஹஜ் பெருநாள் அக்டோபர் 4.
மாதப்பிறப்பினை கணக்கிட வேறு வழி முறைகளை பயன்படுத்தும் Fiqh Council of North America/Islamic Society of North America
அமைப்புக்கும் செப்டம்பர் 25 - துல்ஹஜ் 1 ஆகும். அவர்களுக்கு - அரபா தினம் - அக்டோபர் 3, ஹஜ் பெருநாள் அக்டோபர் 4.
உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு செப்டம்பர் 24 (அமாவாசை) அன்று
துல்கஃதா 29 பூர்த்தி ஆகிறது. செப்டம்பர் 24 அன்று வானிலை சூழல் தெளிவாக இருந்தால், தென் பசிபிக் கடலின் மேற்கு பகுதியிலும், தொலை
நோக்கிகளின் உதவிக்கொண்டு - தென் அமெரிக்க கண்டத்திலும், அருகாமை கடல் பகுதியிலும் பிறையை காணலாம். அவ்வாறு பிறை தென்பட்ட
செய்தி கிடைத்தால், அவர்கள் செப்டம்பர் 24 அன்று துல்கஃதா 29 பூர்த்தி செய்து, செப்டம்பர் 25 அன்று துல்ஹஜ் மாதம் துவக்குவர். அரபா தினம் - அக்டோபர் 3, ஹஜ் பெருநாள் அக்டோபர் 4.
அவ்வாறு செய்தி கிடைக்கவில்லையெனில் செப்டம்பர் 25 அன்று துல்கஃதா 30 பூர்த்தி செய்து, செப்டம்பர் 26 அன்று துல்ஹஜ் மாதம் துவக்குவர்.
அவர்களுக்கு - அரபா தினம் - அக்டோபர் 4, ஹஜ் பெருநாள் அக்டோபர் 5.
அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு செப்டம்பர் 24 (அமாவாசை) அன்று துல்கஃதா 28 பூர்த்தி
ஆகிறது. எனவே அவர்கள் செப்டம்பர் 25 அன்று துல்கஃதா 29 பூர்த்தி செய்வர். அன்று வெறுங்கண்கள் கொண்டு காயல்பட்டினத்தில் பிறையை
எளிதாக காணலாம். அவ்வாறு பிறையை கண்டால் - அவர்கள், செப்டம்பர் 25 அன்று துல்கஃதா 29 பூர்த்தி செய்து, செப்டம்பர் 26 - துல்ஹஜ்
மாதம் துவக்குவர். அரபா தினம் - அக்டோபர் 4, ஹஜ் பெருநாள் அக்டோபர் 5.
செப்டம்பர் 25 அன்று பிறை தென்படவில்லை என்றால், அவர்கள் செப்டம்பர் 26 அன்று துல்கஃதா 30 பூர்த்தி செய்து செப்டம்பர் 27 அன்று துல்ஹஜ்
மாதம் துவக்குவர். அரபா தினம் - அக்டோபர் 5, ஹஜ் பெருநாள் அக்டோபர் 6.
|