காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் அந்நிர்வாகத்தின் சார்பில், இம்மாதம் 21ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (நாளை) 08.30 மணி முதல் 15.30 மணி வரை, எலும்பு - மூட்டு மருத்துவ பரிசோதனை இலவச முகாம் நடைபெற்றது.
எலும்பு முறிவு, முதுகுத்தண்டு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.ஏ.ஷஃபீர் தலைமையில், டாக்டர் எஃப்.நஸீர் அலீ, டாக்டர் எம்.கனிமொழி ராமு ஆகியோரடங்கிய மருத்துவக் குழுவினர் இம்முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, ஆலோசனைகளை வழங்கினர்.
இம்முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் - ரூபாய் 1,500 மதிப்புள்ள - எலும்பின் வலிமை மற்றும் வைட்டமின் பற்றாக்குறைத் தன்மையைக் கண்டறியும் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன.
இப்பரிசோதனைக்கான பி.எம்.டி. கருவியையும், ஏற்பாடுகளையும் Cipla நிறுவனத்தின் பகுதி மேலாளர்கள் மணிகண்டன், வில்லியம் ஆகியோர் செய்திருந்தனர்.
இம்முகாமில், காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த 176 பேர் பங்கேற்றுப் பயனடைந்தனர். கே.எம்.டி. மருத்துவமனை நிர்வாகிகள், மேலாளர் கே.அப்துல் லத்தீஃப் மற்றும் பணியாளர்கள் முகாம் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
கே.எம்.டி. மருத்துவமனை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |