பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து செப்டம்பர் 27 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா - சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர் பதவிகளை இழந்துள்ளார்.
இத்தீர்ப்பினை கண்டித்து - இன்று (செப்டம்பர் 30) ஆறுமுகனேரி மெயின் பஜாரில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு கே.கே.அரசகுரு தலைமை வகித்தார். மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளர் எம்.ராமச்சந்திரன், ஆறுமுகனேரி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ரா.ரவிச்சந்திரன், நகர அவைத் தலைவர் இ.அமிர்தராஜ், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.கார்த்திகேயன் மற்றும் நகர துணை செயலாளர் பி.கனகராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஏ.பி.ஆர்.அந்தோணி கிரேஸி சிறப்புரையாற்றினார்.
உண்ணாவிரத்தில் நகர ஜெ.பேரவை நகர செயலாளர் காந்திராமசாமி, ஆறுமுகனேரி கூட்டுறவு உப்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் எஸ்.லெட்சுமணன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஆர்.மகாலிங்கராஜ், பூல்ராஜ், நயினார், நகர பொருளாளர் ராமதுரை, செல்வி ரவி, முன்னாள் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ராஜா, மாவட்ட துணை செயலாளர் காயல் மௌலானா, காயல்பட்டணம் நகராட்சி கவுன்சிலர்கள் சம்சதீன், அந்தோணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புகைப்படங்களில் உதவி:
எம்.எஸ்.எம்.சம்சுதீன்,
13வது வார்டு உறுப்பினர், காயல்பட்டினம் நகர்மன்றம்.
|