பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து செப்டம்பர் 27 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா - சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர் பதவிகளை இழந்துள்ளார்.
இத்தீர்ப்பைக் கண்டித்து, சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
சென்னை ராயபேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் இருந்து துவங்கிய மனித சங்கிலி போராட்டத்திலும், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்திலும் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், அவரது கணவர் சேக் அப்துல் காதர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
|