காயல்பட்டினம் யூஃபா ஜூனியர்ஸ் விளையாட்டுக் குழுவின் சார்பில், 7ஆம் ஆண்டு கால்பந்து சுற்றுப்போட்டி, இம்மாதம் 27ஆம் நாள் துவங்கி, வரும் அக்டோபர் மாதம் 04ஆம் நாள் வரை, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெற்றது.
இச்சுற்றுப்போட்டியில், காயல்பட்டினம் யூஃபா ஜூனியர்ஸ், காலரி பேர்ட்ஸ், எல்.கே.மேனிலைப்பள்ளி ஆகிய அணிகளும், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி, வீரபாண்டியன்பட்டினம், புன்னைக்காயல், நாசரேத் அணிகளும் பங்கேற்றன.
இம்மாதம் 04ஆம் நாளன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி அணியும், காயல்பட்டினம் காலரி பேர்ட்ஸ் அணியும் மோதின.
ஆட்டத்தின் முதற்பாதியில் காலரி பேர்ட்ஸ் அணி ஒரு கோலும், இரண்டாவது பாதியில் நாசரேத் அணி ஒரு கோலும் அடித்த நிலையில் நேரம் நிறைவடையவே, போட்டி சமனில் முடிவுற்றது.
பின்னர் சமனுடைப்பு முறையில் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்க போட்டி நடுவர்களான ஜமால், இஸ்மாஈல், ராஸிக், ஆஸாத் முடிவு செய்தனர். அதில் 3-1 என்ற கோல் கணக்கில் காலரி பேர்ட்ஸ் அணி வெற்றிபெற்றது.
இறுதிப்போட்டியில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க இணைச் செயலாளர் எஸ்.எம்.ரஃபீ அஹ்மத், எல்.டீ.எஸ்.கோல்ட் ஹவுஸ் அதிபர் எல்.டீ.சித்தீக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். போட்டி இடைவேளையின்போது, அவர்களுக்கு ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
19.00 மணியளவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. அதில், ஈரணிகளின் வீரர்களுக்கான தனிப்பரிசுகள், சிறப்புப் பரிசுகளுடன், இரண்டாமிடம் பெற்ற - வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கேடயமும் பரிசாக வழங்கப்பட்டன.
தகவல் & படங்கள்:
S.B.B.புகாரீ
யூஃபா ஜூனியர்ஸ் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |