செய்தி: ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து இயல்பு வாழ்க்கை பாதிப்பு! காயல்பட்டினம் வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byP.S. ABDUL KADER (KAYALPATNAM)[28 September 2014] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 37538
நீதிமன்ற தீர்ப்பு பாதகமாக வந்திருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய பக்குவம் அதிமுகவினருக்கு வரவேண்டும்.
சட்டமும்,நீதியும் இத்துடன் முடிந்துவிடப்போவதில்லை.
மேல்முறையீடு செய்து இவ்வழக்கிலிருந்து விடுதலை பெற நிறைய காலம் உள்ளது.
இந்திரா காந்தி அளவிற்கு நீதிமன்றத்தால் நெருக்கடிக்குள்ளானவர்கள் இன்றுவரை யாரும் இல்லை. ஆனால் அப்படிப்பட்ட இந்திரா காந்தி அதையெல்லாம் தூசி போல ஊதித்தள்ளி இந்திய வரலாற்றுப் பக்கங்களில் இரும்புப்பெண்மணியாய் இருக்கிறார்.
அதிமுக பொது செயலாளர் மாண்புமிகு அம்மாவிற்கு நீதிமன்றமும்,வழக்குகளும் புதிது அல்ல. தன்மீதான 32 வழக்குகளிலும் சரி, காவிரி, முல்லை பெரியாறு போன்ற மக்களின் நலன் தொடர்பான வழக்குகளிலும் சரி வெற்றி பெற்றே வந்திருக்கிறார்.
இந்த தோல்வி நிரந்தரம் அல்ல. இதுவும் ஒரு அனுபவம். இந்த அனுபவம் அதிமுகவை இன்னும் அதிகம் பலப்படுத்தும்.
எதிர்காலத்தில் தவறு நிகழாமல் தடுக்கும்.
MGR ரின் இரத்ததின் இரத்தமே, தயவுசெய்து பொறுமை காத்திடுங்கள் தோழர்களே! தமிழகத்தில் அதிமுகவினரால் எங்கேயாவது அசம்பாவிதம் நடந்தால் அது நமது ஆட்சிக்கும் கட்சிக்கும் கெட்டப்பெயரைத்தான் ஏற்படுத்தும்.
தற்போது நடப்பது அதிமுக ஆட்சிதான் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். கலவரம் செய்வது அதிமுகவினராக இருந்தாலும்/ அதிமுக கரை வேட்டியிலிருக்கும் மாற்று கட்சிக்காரனாய் இருந்தாலும் தயவு தாட்சன்யம் இல்லாமல் பிடித்து போலிசில் ஒப்படையுங்கள்.
மக்களைவிட மிகப் பெரிய நீதிபதி நாட்டில் யாரும் இல்லை. அந்த மக்களிடம் கெட்டப்பெயர் வாங்கி கட்டுமரத்தை ஆட்சியில் ஏற்றிவிடாதீர்கள்.
கருணாநிதி கூட்டத்தின் கொட்டத்தை அடக்க இன்றுவரை தமிழகத்தில் எவரும் பிறக்கவில்லை அம்மாவை தவிர.
அந்த ஒரு ஒற்றை காரணம் போதும் அம்மா மீண்டுவர.
மாண்புமிகு அம்மா 2002ல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து மீண்டும் முதல்வராகவில்லையா? அதுபோல நினைத்துக்கொள்ளுங்கள்.
1996ல் ஆட்சி போய்,சிறைக்கு போய் மீண்டு வந்து 2001ல் மீண்டும் ஆட்சியை பிடித்தோம். தற்போது அந்த நிலை இல்லை. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி இருக்கிறது. இருக்கும் காலத்தில் மக்கள் நல திட்டங்களை இன்னும் அதிகம் செயல்படுத்தலாம்.அதற்குள் வழக்கை மேல்முறையீடு செய்து வெற்றியை ஈட்டிவிடலாம்.
பொதுமக்களுக்கோ,பொது சொத்துகளுக்கோ ஆளுங்கட்சியினரால் எந்தவொரு சேதாரமும் ஏற்படக்கூடாது.
எம்.ஜி.ஆர் காலத்திற்கு பிறகு கட்சி இரண்டாய் பிரிந்து இரட்டை இலை இலை சின்னம் முடிக்கப்பட்டது.மீண்டும் கட்சி ஒன்றாகி இரட்டை இலை வெற்றி சின்னம் அதிமுகவிற்கு கிடைத்தது.இந்தியாவில் எந்தவொரு கட்சியும் ஒருமுறை இழந்த சின்னத்தை மீண்டும் பெற்றதில்லை.
மீண்டும் 'ஃபீனிக்ஸ்' பறவையாய் நெருப்பாற்றை கடந்து வருவார் அம்மா!
காத்திருப்போம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross