Re:...WHO KNOWS NOT ..... posted bymackie noohuthambi (chennai)[02 October 2014] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 37585
WHO KNOWS NOT AND KNOWS NOT THAT HE KNOWS NOT IS - A FOOL AVOID HIM
WHO KNOWS AND KNOWS NOT THAT HE KNOWS IS - ASLEEP
AWAKE HIM
WHO KNOWS AND KNOWS THAT HE KNOWS IS ... WISE
FOLLOW HIM
இது ஆங்கிலத்திலே சொல்லப்படும் ஒரு அற்புதமான பழமொழி. எனக்கு அதை கற்றுத தந்தவர்கள் மறைந்தும் மறையாமல் எனதுள்ளத்தில் நிறைந்து நிற்கும் SK மச்சான் அவர்கள்.
ஒருவனுக்கு ஒரு விஷயம் தெரியாது. அது தனக்கு தெரியாது என்பதும் அவனுக்கு தெரியாது. அப்படிப் பட்டவன் முட்டாள். அவனிடமிருந்து விலகி நில். .
ஒருவனுக்கு ஒரு விஷயம் தெரியும். ஆனால் அது தனக்கு தெரியும் என்பது அவனுக்கு தெரியாது. அவன் தூக்கத்தில் இருக்கிறான். அவனை விழித்து எழ செய்.
ஒருவனுக்கு ஒரு விஷயம் தெரியும். அது தனக்கு தெரியும் என்பதும் அவனுக்கு தெரியும். அவன் புத்திசாலி . அவனை பின்பற்று...
இந்த மகதப் மதரசாவின் ஆசிரியர் SAC ஹாபிசா அவர்கள் எனக்கு நண்பர் , ஒரு வகையில் சொந்தமும் கூட. அவர் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்று ஊர் வந்த போது அவரை நான் சந்தித்தேன். இங்கு ஊரில் ஏதாவது சம்பளத்துக்கு சேர வேண்டும் என்று ஆசைப் பட்டார்கள். மீண்டும் ஒரு அடிமை வாழ்வா?
உங்களிடம் உள்ள மார்க்க அறிவை ஏன் பயன்படுத்தி இப்படி ஒரு நல்ல சேவை செய்யக் கூடாது என்று கேட்டேன். நேற்று முன்தினம் அதற்கு பதில் கிடைத்தது. என்னுடன் அலைபேசியில் தொடர்புகொண்டு இப்படி ஒரு மகதப் அவர் தலைமையில் ஆரம்பிக்க இருப்பதாக சொன்னார். மிக்க சந்தோஷம்.
ஊரு முழுவதும் இப்படி பரவலாக மக்தப்கள் ஆரம்பிக்கப் படவேண்டும். மார்க்க அறிவுகள் இளைய தலைமுறையின் உள்ளங்களில் வேரூன்ற வேண்டும். காலை எழுந்தது முதல் இரவு தூங்க செல்லும் வரை கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் எல்லா நிலையிலும் ஓத வேண்டிய து ஆ க்களை நமக்கு கற்று தந்திருக்கிறார்கள். அதை இளம் பிஞ்சுகள் உள்ளத்தில் ஒரு injection போல் ஏற்ற வேண்டும் என்று அவரிடம் சொன்னேன்.அல்லாஹ் அவரையும் அவர் உருவாக்கும் மாணவ மணிகளையும் கபூல் செய்து கொள்வானாக. வாழ்த்துக்களும் து ஆ க்களும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross