Re:...ஊரெங்கும் நடத்தப்படவேண்டிய விழிப்புணர்வு கூட்டம் posted bymackie noohuthambi (chennai)[02 October 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37587
ஜனசேவா என்ற வட்டி இல்லா கடன் வங்கி என்ற ஒரு அமைப்பு நமதூரில் காலூன்றி பணி செய்து வருகின்ற செய்தி இன்னும் பரவலாக பேசப்பட வேண்டும்
அதற்காக ஊரின் கீழ் பகுதி, மத்திய பகுதி எல்லா இடத்திலும் விளக்க கூட்டம் நடத்தும்படி இப்னு சவூத அவர்களையும் முன்னாள் பாரத வங்கி ( State Bank ) மேலாளர் அப்துர் ரஹீம் அவர்களையும் அதன் காயல்பட்டினம் கிளை பொறுப்பாளராக பணியாற்றும் பொது நல ஊழியர் இக்பால் அவர்களையும் பல முறை வேண்டிக் கொண்டேன். கடந்த ஆகஸ்ட் 15ம் திகதி இப்படி ஒரு கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்தார்கள். என்ன காரணத்தினாலோ அது நடக்காமல் போய்விட்டது.
பெண்களுக்கு விழிப்புணர்வு வந்தால் மட்டுமே இந்த வட்டி இல்லா கடன் வங்கி திட்டம் நமதூரில் வலுவாக இயங்க முடியும். வங்கிகளில், FINANCE கம்பெனிகளில் - சீட்டு கம்பெனிகளில் ஆள் தெரியாத இடங்களில் மக்கள் நடமாட்டமில்லாத பகுதிகளில் எல்லாம் நமது சகோதரிமார் நகைகள் பல லட்சம் தங்கள் கணவன்மார்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ, கட்டாயத்தினாலோ நிர்பந்தத்தினாலோ அடகு வைத்து , வட்டி கூட கட்ட முடியாமல், வெளியில் சொல்ல முடியாமல், பின்பு ஏலத்துக்கு வரும்போது அவர்கள் சாயம் வெளுப்பதும் மற்றவர்கள் அவர்களை வார்த்தைகளால் நோகடிப்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த அவல நிலை நீங்குவதற்கு ஒரு நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ள சகோதரர்கள் இப்படியான விழிப்புணர்வு கூட்டம் நடத்துவதற்கு இடம் கேட்கும்போது தாராளமாக நமது பெண்கள் தைக்காகளில் கூட இடம் கொடுக்கலாம். இது அல்லாஹ்வுக்கும் அவனது ரசூலுக்கும் மிக விருப்பமான செய்தி. வட்டி வாங்குபவர்கள் அல்லது வட்டிக்கு கொடுப்பவர்கள் அல்லாஹ்வுடனும் அவனது ரசூலுடனும் போர் செய்ய தயாரா என்று கேட்கும் கடுமையான் வாசகங்கள் திருமறையிலும் திருநபி மணிமொழி மூலமும் நிறைய காணக் கிடக்கின்றன. உலமாக்களும் அடிக்கடி இந்த வட்டியின் தாக்கம் பற்றி புகாரி ஷரீபிலும் மற்றும் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களிலும் அதிகம் பேசி வருகிறார்கள். இந்த விழிப்புணர்வு கூட்டங்களி நமதூர் உலமாக்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்..
அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யுங்கள். ஊரில் எந்த பகுதியிலும் இந்தக் கூட்டம் நடக்கவே இல்லை, எங்களுக்கு யாரும் சொல்ல வில்லையே, தெரியாதே என்ற பேச்சே இல்லாமல், ஊர் முழுவதும் இதே பேச்சாக ஆகி விட வேண்டும். அல்லாஹ் உங்கள் முயற்சிகளுக்கு வெற்றியை தருவான்.
ITHAA JAA'A NASRULLAAHI VAL FATH'HU VARAITHANNAASA YADHKHULOONA FEE DHEENILLAAHI AFVAAJAA....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross