Re:...இன்னாலில்லாஹி posted byNIZAR (kayalpatnam)[03 October 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 37598
என் இனிய நண்பர் ஹாஜி முஹம்மத் இஸ்மாஈல் நேற்று இரவு சென்னையில் காலமானார். இந்த செய்தி அவரின் நண்பர்கள் மற்றும் அணைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஒருவரை பார்த்தாலே சந்தோசம் வரும் என்று சொல்வார்கள். அதேபோல இவரை சந்தித்தாலே சந்தோசமும் இனிமையும் பற்றிகொள்ளும்.அந்த அளவுக்கு அனைவரிடமும் மிக இனிமையாக, இணக்கமாக பழகும் நற்பண்பு
கொண்டவர்.
எத்தனை கவலை இருந்தாலும் அதை பற்றி சற்றும் வெளிக்காட்டாமல் சிரித்த முகத்தோடு பழகுபவர்.எந்த பலனும் எதிர்பார்ர்க்காமல் குடும்பங்களுக்கு நண்பர்களுக்கு உதவி செய்பவர்.
இவருடைய அதிர்ச்சி மரணம் அவரோடு நெருங்கி பழகிய என்னை போன்ற நண்பர்களை நிலை குழைய வைத்துள்ளது. இறைவனின் நாட்டத்தை எற்றுகொண்டுதானே ஆகவேண்டும்.
இன்னாலில்லாஹி என்ற இறை வார்த்தைகளை கொண்டு பொருத்துகொள்வோம். இறைவன் மர்ஹூம் அவர்களுக்கு சொர்க்கத்தை சொந்தமாக்குவானாக என இறையிடம் இறைஞ்சுவோம்.
அவர்களை இழந்து வாடும் அவர்களின் மக்கள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் சலாதினையும் தெர்வித்து கொள்கிறேன்.இறைவன் குடும்பத்தினருக்கு சபுரன் ஜமீலா என்ற பொறுமையை அளிப்பானாக....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross