Re:...உணர்ச்சி வசப்படுபவர்கள் சிந்தனைக்கு... posted bymackie noohuthambi (chennai)[03 October 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37609
நாம் மிகவும் நேசிக்கும் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு 18 ஆண்டுகள் வழக்கு நடந்து இறுதியில் தீர்ப்பு கூறப்பட்ட போது அவருக்கு எதிராக தீர்ப்பு அமைந்து விட்டது சட்டத்தின் குற்றமல்ல. நீதிபதியின் குற்றமுமல்ல. அந்த தீர்ப்பை எதிர்கொள்ள நீதிமன்றமே சில சலுகைகளை தந்துள்ளது. மேல் கோர்ட்டு உச்ச நீதிமன்றம் என்றெல்லாம் வழக்கை முன்னெடுத்து செல்ல முடியும். 7ம் திகதியே கூட அம்மா அவர்கள் ஜாமீனில் வெளி வந்து விடலாம், யாருக்கு தெரியும்.
இப்படி இருக்க தீர்ப்பை எதிர்த்து, தொடர்ந்து சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வேலையில் தொண்டர்கள் ஈடு படுவது ஏற்புடையது அல்ல. அப்படி எதிர்ப்பு கோஷங்கள் நாடு முழுவதும் எழுப்புவதால் ஒரு தண்டனையை மறுபரிசீலனை செய்து ஒருவரை குற்றமற்றவர் - நிரபராதி என்று நீதி மன்றம் அறிவிக்க ஆரம்பித்தால்...
போலி என்கௌன்ட்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இறுதி தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கும் அமித் ஷா அவர்களை தண்டிக்க முடியுமா?சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மம்தா பநேர்ஜியை தண்டிக்க முடியுமா?ஏர்செல் மக்சிஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தயாநிதி மாறன், கலாநிதி மாறன் அவர்களை தண்டிக்க முடியுமா? நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள குமாரமங்கலம் பிர்லாவை தண்டிக்க முடியுமா? 2G spectrum வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அணில் திருபாய் அம்பானியை தண்டிக்க முடியுமா? அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை அடிக்கடி நேரில் சந்தித்ததாக வழக்கில் சிக்கியுள்ள ரஞ்சித் சின்ஹாவை தண்டிக்க முடியுமா? சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மாயாவதியை தண்டிக்க முடியுமா? எல்லாவற்றுக்கும் மேலாக அம்மா அவர்களும் அவர்கள் கட்சியினரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ராசா - கனிமொழி ஆகியோரை 2G spectrum வழக்கிலிருந்து அதன் தண்டனையிலிருந்து அவர்கள் தப்பாமல் தண்டிக்க முடியுமா? எல்லாவற்றையும் யோசித்து பாருங்கள்.
சட்டம் அதன் கடமையை செய்யும்போது சில இழப்புக்களை நாம் தாங்கித்தான் ஆக வேண்டும். அதை சட்டப்படி எதிர்கொள்ளத்தான் வேண்டும். அதற்கான மனோ வலிமை அம்மா அவர்களுக்கு நிறையவே உண்டு. SHE IS LEGALLY OUT BUT POLITICALLY SOUND என்று எல்லோரும் அவரின் அரசியல் மறுபிரவேசத்தை சிறப்பாக எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை நீர்த்துபோகும் செயலை தனது கட்சியினர் அளவுக்கு மீறி செய்து வருவது அம்மா அவர்களுக்கே கசப்பாக இருக்கலாம்.
நீதி கேட்டு நெடிய பயணம் போக வேண்டியுள்ளது. ஆனால் நீதியையும் நீதி மன்றத்தையும் நீதிபதிகளையும் கொச்சைபடுத்தி பேசுவதால் நீதியை நமது பக்கம் வளைத்து எடுக்க முடியாது என்பதை ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்கள் உணர்ந்து தங்கள் பாதையை மாற்றிக் கொள்ளுங்கள். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் வைரத்தை வைரத்தால்தான் அறுக்க வேண்டும். தீர்ப்பை வாதத்தால்தான் நீதிபதிகளால்தான் வென்றெடுக்க முடியும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross