தாங்க இயலவில்லையே... posted byS.K.Salih (Kayalpatnam)[03 October 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 37612
என் நெஞ்சில் நிறைந்த இஸ்மாஈல் காக்கா...
இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுச் செல்வார் என எதிர்பார்க்கவே இல்லையே...?
எத்தனை அவதிகள் உள்ளுக்குள் இருந்தாலும், எதையுமே எங்களிடம் காண்பிக்காமல் - புன்சிரிப்பு நிறைந்த முகத்தையும், கேலியும் - கிண்டலும் கலந்த பேச்சையும் கொண்டு எங்களையெல்லாம் தன்னோடு கட்டிப்போட்டிருந்த கள்ளங்கபடமில்லாத ஆத்மா இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டும் பிரிந்துவிடும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லையே...?
பாழாய்ப்போன இந்த நோயின் கொடுமை என்றுதான் தீருமோ...? படைத்தவனுக்கே வெளிச்சம்!!!
எப்போதுமே இவர்களுடன் நெருக்கமான தொடர்புள்ள எனக்கு, கடந்த ஓராண்டு காலமாக மிக நெருக்கமான தொடர்பு கிடைத்தது. அதற்குக் காரணம், இயற்கையான உணவு முறை குறித்த விழிப்புணர்வுகள்.
நம்மாழ்வார் அய்யாவின் முகாமில் பயிற்சிபெற்று வந்த பிறகு, அடியேன் எழுதிய கட்டுரையைப் படித்த பின்னர், என்னை “காயல் நம்மாழ்வார்” என்றே அழைத்து வந்தார். இந்த நிமிடம் வரை என் காதுகளில் அது ரீங்கரித்துக்கொண்டே இருக்கிறது.
கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் காக்கா அவர்கள் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை ஈந்தருள்வானாக...
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross